டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. துணை ஆட்சியர், டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் மெயின் தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இதை https://www.tnpsc.gov.in/document/Oraltestmarks/RL_G1_04_2024.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, தரவரிசைப் பட்டியலை தெரிந்து கொள்ளலாம். 188 பேருக்கான தரவரிசைப் பட்டியல் தற்போது, வெளியாகி உள்ளது. டிசம்பர் 10, 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் குரூப் 1 தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.