ஒரே ஆண்டில் டெஸ்ட், டி20, ஒருநாள் மற்றும் ஐபிஎல் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை சுப்மன்கில் படைத்துள்ளார். இளம் வீரர் சுப்மன் கில் இந்த ஆண்டு ஐபிஎல் சீசனிலும் குஜராத் டைட்டன்ஸ் அணியில் அருமையாக விளையாடி வருகிறார். அந்தவகையில் ஐபிஎல் தொடரின் 62வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் கூட அதிரடியாக விளையாடி 56 பந்தில் சதம் விளாசினார் சுப்மன் கில். இது தான் அவருக்கு ஐபிஎல் போட்டியில் முதல் சதமும் கூட. இதன் மூலம் ஒரே ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட், டி20 கிரிக்கெட், ஒருநாள் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் ஆகிய போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றுள்ளார். சுப்மன் கில் 2023-ல் டெஸ்ட் கிரிக்கெட் ,டி20 கிரிக்கெட்டில், ஒரு நாள் கிரிக்கெட், ஐபிஎல் ஆகிய போட்டிகளில் தலா 1 சதம் அடித்துள்ளார். மேலும், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மட்டும் 13 போட்டிகள் விளையாடி 576 ரன்கள் எடுத்து இந்த ஆண்டு அதிகம் ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். அவருடைய ஸ்டரைக் ரேட் 146.19 உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Post
இனிமேல் Facebook-க்கும் ப்ளூடிக்!... சந்தா சேவை அறிமுகம்!... ட்விட்டரை தொடர்ந்து மார்க் ஜுக்கர்பெர்க் அதிரடி!
Fri May 19 , 2023
You May Like
-
2023-06-13, 3:27 pm
30 நிமிடங்கள் விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்ட மெஸ்ஸி
-
2024-05-17, 2:07 pm
“முதலில் இந்த ரூல்ஸ்-ஐ மாத்தணும்..!” இன்போசிஸ் நாராயணமூர்த்தி சொல்வது என்ன?