fbpx

#Just In | ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு திடீர் ரத்து..!! புதிய தேதி அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 13,500 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்நிலையில், முதல் கட்டமாக 2,582 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கான போட்டி தேர்வு வருகின்ற 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், தேர்வர்கள் பயிற்சி மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தான், தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பயிற்சி புத்தகங்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன.

இதனால் போட்டி தேர்வு எழுதும் தென் மாவட்ட ஆசிரியர்களின் நிலையை கருதி, தேர்வு நடைபெறும் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், போட்டி தேர்வு 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது வழங்கப்பட்டுள்ள ஹால் டிக்கெட்டை வைத்து தேர்வுகள் தேர்வு எழுதலாம் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Chella

Next Post

காதலனின் கவனத்தை பெற கற்பழிப்பு புகார்.! இளம் பெண்ணால் சிக்கலில் சிக்கிய காவல்துறை.!

Wed Dec 27 , 2023
கேரள மாநிலத்தில் காதலனின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஆட்டோ ஓட்டுனரின் மீது இளம் பெண் ஒருவர் போலியான பாலியல் பலாத்கார புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் இளம்பெண்ணை கண்டித்து அறிவுரை கூறிய அனுப்பி வைத்தனர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் செல்போன் மூலம் தனது காதலனை தொடர்பு கொண்டு தான் பயணம் செய்து வந்த ஆட்டோவின் டிரைவர் தன்னை […]

You May Like