fbpx

#Just In..!! தொடர் கனமழை எதிரொலி..!! தேர்வுகள் ஒத்திவைப்பு..!! தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு..!!

கனமழை காரணமாக நாளை முதல் நடக்கவிருந்த தட்டச்சுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தில் அதி கனமழை பெய்வதற்கான ’ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் இன்று பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

#Just In..!! தொடர் கனமழை எதிரொலி..!! தேர்வுகள் ஒத்திவைப்பு..!! தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு..!!

இந்நிலையில், கனமழை காரணமாக நாளை முதல் நடக்கவிருந்த தட்டச்சுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் தமிழகம் முழுவதும் வணிகவியல் பயிலகங்கள் என்ற தட்டச்சு பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவிருந்த தட்டச்சு தேர்வு நவ.19, 20ஆம் தேதிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

#Breaking..!! வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! 37 மாவட்டங்களில் சூறைக்காற்று..!! எப்போது கரையை கடக்கும்..?

Fri Nov 11 , 2022
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதால், வட தமிழக கடலோர பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு – புதுச்சேரி கடற்கரை பகுதியை நாளை அதிகாலை கரையை […]
#Breaking..!! வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! 37 மாவட்டங்களில் சூறைக்காற்று..!! எப்போது கரையை கடக்கும்..?

You May Like