அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர் வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்..
கோவை சுகுணாபுரத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் 3 வது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.. தொண்டாமுத்தூர், வடவள்ளி உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கோவை, சென்னை, திருச்சி என 26 இடங்களில் சோதனை நடைபெற்று வருகின்றது
இதே போல் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது.. சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 13 இடங்களில் சோதனை நடைபெற்று வருகின்றது. தேசிய மருத்துவ குழும விதிக்கு முரணாக, திருவள்ளூரில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனைக்கு விஜயபாஸ்கர் சான்று வழங்கியதாக எழுந்த புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.. இந்த புகாரில் ஆவணங்களை கைப்பற்ற சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது..