Kagney Linn Karter | அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆபாச பட நடிகை கேக்னி லின் கார்ட்டர் (Kagney Linn Karter) தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழந்துள்ளார். அவரது வயது 36. சர்வதேச அளவில் ரசிகர்களை ஈர்த்த அவர், திடீரென தற்கொலை செய்துக் கொண்டு இறந்தது ஏன் என்கிற விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சினிமாவில் நடிகையாக வலம் வர வேண்டும் என நினைக்கும் பலருக்கும் சினிமாவில் பெரிதாக நடிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. சன்னி லியோன், மியா கலிஃபா என ஏகப்பட்ட ஆபாச நடிகைகள் உலகம் முழுவதும் பிரபலமாக வலம் வருகின்றனர். ஒரு கட்டத்துக்கு மேல் அந்த துறையில் நீடிக்க முடியாமல், மன அழுத்த பிரச்சனைகள் மற்றும் உடல் ரீதியான பாதிப்புகளை சந்திக்கும் அவர்கள் அந்த தொழிலே வேண்டாம் என ஒதுங்கி விடுகின்றனர். அப்படி ஒதுங்கி வாழ்ந்து வந்த நிலையில் தான் தற்போது ஆபாச நடிகை கேக்னி லின் கார்ட்டர் தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழந்துள்ளார்.
2005ஆம் ஆண்டுக்கு மேல் ஆபாச படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் இமிடியேட்டாக சர்வதேச அளவில் பிரபலமாக தொடங்கினார். ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல், அதன் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்து தப்பிக்க நடனத்தை நாடியிருக்கிறார். 2019ஆம் ஆண்டு போல் டான்ஸராக ஒஹியோவில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் இணைந்து நடனம் ஆட ஆரம்பித்தவர், பின்னர் ஆபாச படங்களில் நடிப்பதை முழுமையாக நிறுத்தி விட்டார் என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
இளம் வயதில் இருந்தே ஹாலிவுட் சினிமாவில் எப்படியாவது நடிக்க வேண்டும் என போராட்டங்களை நடத்தி வாய்ப்புகளை தேடியும் கிடைக்காத நிலையில் தான் இவர் ஆபாச நடிகையாக மாறினார் என்றும் போல் டான்ஸராக வாழ்க்கையை ஓட்டினாலும் அவருக்கு தொடர்ந்து அவரது இருண்ட கடந்த கால வாழ்க்கை மனதில் ரணமாக இருந்து அவரை வாட்டிக் கொண்டே வந்த நிலையில், இந்த திங்கட்கிழமை தனது வீட்டில் தற்கொலை செய்துக் கொண்டு இறந்து விட்டார் என அவரது குழுவினர் அறிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு பல ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Read More : Annamalai | பாஜகவுக்கு தாவும் MLA-க்கள்..? அண்ணாமலை சொன்ன சூசக பதில்..!! அலர்ட் ஆகும் அரசியல் தலைவர்கள்..!!