fbpx

திருப்பாச்சி பட இயக்குநருக்கு கைலாசா விருது..!! Zoom மீட்டிங்கில் புகழ்ந்து தள்ளிய நித்தி..!!

சர்வதேச போலீசுக்கு சவால் விட்டு பாலியல் வழக்கில் தலைமறைவாக இருக்கும் நித்தியானந்தா, திருப்பாச்சி பட இயக்குனர் பேரரசுவை, Zoom மீட்டிங்கில் சந்தித்து, தர்மரட்சகர் விருது வழங்கி உள்ளார்.

கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி, சினிமாவில் இருந்து அரசியலில் நுழைந்து, குறுக்கு மறுக்காக கருத்து சொல்லி வந்தவர் திருப்பாச்சி பட இயக்குனர் பேரரசு. ராஜராஜ சோழன் இந்து மன்னனாக அடையாளப்படுத்துகிறார் என்ற இயக்குனர் வெற்றிமாறனுக்கு எதிராக பொங்கி எழுந்த, பேரரசுவின் மன தைரியத்தை பாராட்டி, அவருக்கு விருது வழங்கி கவுரவிக்க, பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள நித்தியானந்தா முடிவு செய்துள்ளார். அதன் படி, கைலாசாவில் இருந்து பேசுவதாக கூறி, பேரரசுவை தொடர்பு கொண்டு நித்தியுடன் Zoom Meeting-இல் அமரவைத்து, அவரது திரைப்படங்களின் பெயர்களை ஆகா ஓகோவென்று புகழ்ந்து, பேரரசுவுக்கு ’கைலாசா தர்ம ரட்சகர்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

திருப்பாச்சி பட இயக்குநருக்கு கைலாசா விருது..!! Zoom மீட்டிங்கில் புகழ்ந்து தள்ளிய நித்தி..!!

சர்வதேச போலீசே நித்தி எங்கிருக்கிறார் என்று குழப்பம் அடைந்துள்ள நிலையில், கைலாசா என்ற பெயரில், இல்லாத நாட்டுக்கு அதிபராக இருப்பதாக கூறி, தலைமறைவு வாழ்க்கை நடத்தி வரும் சாமியார் நித்தியானந்தா, சூம் மீட்டிங்கை பயன்படுத்தி, தனது சிஷ்யர்களுக்கு படம் காட்டி வந்த நிலையில், அதன் அடுத்த கட்டமாக, சினிமா, அரசியல் பிரமுகர்களுக்கும் வலைவிரிக்க தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

Chella

Next Post

ஸ்வப்னா சுரேஷின் அடுத்த அதிரடி.. முன்னாள் சபாநாயகரின் கருத்துக்கு பதிலடி.!

Wed Oct 26 , 2022
கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், சமீபத்தில் தனது வாழ்க்கை குறித்து ‘சதியின் பத்ம வியூகம்’ என்ற ஒரு சுயசரிதை புத்தகத்தை எழுதினார். அப்புத்தகத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயன், பினராயி குடும்பத்தினர், ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் மற்றும் பினராய் விஜயனின் அலுவலகத்தை சேர்ந்த சில முக்கிய நபர்கள் மீது பரபரப்பு ஏற்படுத்தும் வகையில் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ கடகம்பள்ளி சுரேந்திரன், […]
படுக்கைக்கு அழைத்த முன்னாள் அமைச்சர்கள்..!! பதறவைத்த சொப்னா..!! பரபரப்பில் கேரளா..!!

You May Like