ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று கடன் பிரச்சனை. ஏதாவது ஒரு ரூபத்தில் யாரிடமாவது பணத்தை வாங்கிவிட்டு அதை திரும்பத் தர முடியாமல் வட்டி கட்டி வருவார்கள். இப்படி வட்டி செலுத்துபவர்கள் அனைவருமே விரைவில் மொத்த கடனையும் செலுத்திவிட வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். கடன் பிரச்சனை மட்டுமல்ல நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சனை என்று நாம் எதை நினைக்கிறோமோ அந்த பிரச்சனை தீர வேண்டும் என்றால் நீங்கள் இந்த வழிபாட்டை செய்து பார்க்கலாம்.
இந்த வழிபாட்டை அஷ்டமி தினத்தில் தான் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை நாம் வீட்டிலேயே செய்யலாம். அவ்வாறு செய்வதற்கு நமக்கு காலபைரவரின் சிலையோ படமோ தேவை என்ற எந்த நிபந்தனையும் இல்லை. இதற்கு நமக்கு புதிதாக வாங்கிய எட்டு அகல் விளக்குகள் வேண்டும். இந்த விளக்குகளில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு கிழக்கு பார்த்தவாறு தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
கால பைரவருக்கு நெய்வேத்தியமாக அவள், வெல்லம் இரண்டையும் கலந்து வைக்க வேண்டும். அடுத்ததாக காலபைரவரின் அஷ்டகம் இருக்கிறது. அந்த அஷ்டகத்தை 8 முறை பாராயணம் செய்ய வேண்டும். இவ்வாறு பாராயணம் செய்து முடித்த பிறகு காலபைரவரை முழுமனதோடு வழிபாடு செய்ய வேண்டும். எந்த பிரச்சனை உங்களுக்கு சீக்கிரம் தீர வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த பிரச்சனையை கூறி வழிபட வேண்டும்.
இந்த வழிபாட்டை இரவு 8 மணிக்கு மேல் தான் செய்ய வேண்டும். இந்த முறையில் தொடர்ச்சியாக 8 அஷ்டமிகள் நாம் ஒரே பிரச்சனை தீர வேண்டும் என்று கூறி பைரவருக்கு 8 தீபங்கள் ஏற்றி வைத்து அவருடைய அஷ்டகத்தை படிப்பதன் மூலம் அந்த பிரச்சனை தீர்வதற்குரிய வழியை காலபைரவர் காட்டுவார். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வேண்டும், பிரச்சனைகள் படிப்படியாக குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் காலபைரவரை முழுமனதோடு நம்பி இந்த முறையில் வழிபாட்டை செய்யலாம்.
Read More : இந்த 5 பொருட்கள் வீட்டில் இருந்தால் போதும்..!! கல்லீரலை ஈசியாக சுத்தம் செய்யலாம்..!!