fbpx

கள்ளக்குறிச்சி சம்பவம்..! ஜாமீன் வழங்க மாணவியின் தாய் எதிர்ப்பு..! ஒருநாள் காவலில் விசாரிக்க அனுமதி..!

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க புலனாய்வு பிரிவு போலீசாருக்கு அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரிடம் விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில். 5 பேரையும் ஜாமீனில் விடுவிக்க கோரி விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் பள்ளி நிர்வாகம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு கடந்த 29ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

கள்ளக்குறிச்சி சம்பவம்..! ஜாமீன் வழங்க மாணவியின் தாய் எதிர்ப்பு..! ஒருநாள் காவலில் விசாரிக்க அனுமதி..!

அப்போது மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தி சின்னசேலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர் நகலை கொண்டு ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதால், அந்த மனுவை ஏற்க முடியாது எனவும் வழக்கு சிபிசிஐடி வசம் வழக்கு சென்றுவிட்டதால் சிபிசிஐடி பதிவு செய்த எப்.ஐ.ஆரை கொண்டு ஜாமீன் மனு தாக்கல் செய்யுமாறும் ஜாமீன் மனு தொடர்பாக சிபிசிஐடி விளக்கம் அளிக்கவும் விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தி உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் பள்ளி தரப்பினர் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்த எப்ஐஆர்-ஐ சனிக்கிழமை பள்ளியின் தரப்பில் விழுப்புரம் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட நிலையில், ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது.

கள்ளக்குறிச்சி சம்பவம்..! ஜாமீன் வழங்க மாணவியின் தாய் எதிர்ப்பு..! ஒருநாள் காவலில் விசாரிக்க அனுமதி..!

இதற்கிடையே, ஸ்ரீமதியின் தாய் செல்வி தரப்பில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் ஜாமீன் வழங்க கூடாது என இன்று மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிபதி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து பள்ளி தாளாள உள்ளிட்ட 5 பேர் ஜாமீன் மனுவையும் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தோடு, வழக்கு தொடர்பாக கைது செய்த 5 பேரையும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை செய்ய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார்.

Chella

Next Post

ஜூலை மாதத்தின் ஜிஎஸ்டி வரி வருவாய் 1.49 லட்சம் கோடி..! - மத்திய அரசு

Mon Aug 1 , 2022
கடந்த ஜூலை மாதத்தின் ஜிஎஸ்டி வரி வருவாய் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 995 கோடி ரூபாய் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டதை அடுத்து மாதம்தோறும் கிடைக்கும் வரி வருவாய் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இதன் மூலம் வரி எவ்வளவு குறைந்துள்ளது அல்லது கூடியுள்ளது என்பது உடனடியாக தெரிந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில், நேற்றுடன் முடிந்த ஜூலை […]

You May Like