கள்ளக்குறிச்சி மாவட்டம் வெள்ளிமலை அருகே உள்ள எழுத்தூர் கிராமத்தில் வசிக்கும் கோவிந்தன் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கும் இடையே நில தகராறு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில் ராஜசேகரின் நிலத்திற்கு கோவிந்தன் குடும்பத்தினர் சென்றுள்ளனர். அப்போது ராஜசேகர் மற்றும் அவருடைய மகன்களான பாலகிருஷ்ணா, பாபு உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் இருதரப்பு நடக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் 2 குழுவினரும் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.
அப்போது ராஜசேகர் மற்றும் அவருடைய மகன்கள் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கோவிந்தனின் குடும்பத்தினர் ஆன ஷங்கர், உண்ணாமலை, சுசிலா, கலியமூர்த்தி உள்ளிட்டோரை வெட்டி உள்ளனர். இதன்பிறகு நால்வரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.