fbpx

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் போலீஸ் பாதுகாப்புடன் மறு சீரமைப்பு பணிகள் தீவிரம்..!

கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியின் சீரமைப்பு பணிகளை காவல்துறையினர் பாதுகாப்போடு மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13ஆம் தேதி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஜூலை 17ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி உயிரிழப்புக்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறி பள்ளி கட்டிடம் முழுவதும் அடித்து நொறுக்கப்பட்டும், வாகனங்கள் மற்றும் தளவாடப் பொருட்கள் வகுப்பறையில் உள்ள பொருட்கள் முழுவதும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் போலீஸ் பாதுகாப்புடன் மறு சீரமைப்பு பணிகள் தீவிரம்..!

இச்சம்பவத்திற்கு பிறகு பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் பள்ளியை சீரமைக்கவும் பள்ளியை தொடர்ந்து நடத்தவும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாவட்ட நிர்வாகத்திற்கு பள்ளியை சீரமைக்க உரிய அதிகாரிகளை நியமித்தும் கள நிலவரங்களை ஆய்வு மேற்கொண்டும் அனுமதி அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்து இருந்தது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நேற்றைய முன் தினம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத் சேதமடைந்த பொருட்களை அப்புறப்படுத்தி பள்ளியை புணரமைக்க 45 நாட்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் காவல்துறை பாதுகாப்புடன் சேதமடைந்த பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் போலீஸ் பாதுகாப்புடன் மறு சீரமைப்பு பணிகள் தீவிரம்..!

Chella

Next Post

வெந்து தணிந்தது காடு 2-ம் பாகம் … கண்டிஷன் போட்ட ஐசரி கணேஷ் …

Mon Sep 19 , 2022
வெந்து தணிந்தது காடு 2ம் பாகம் திரைப்படம் எடுக்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கண்டிஷன் போட்டுள்ளார். கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி வெற்றியடைந்துள்ளது. இதற்காக நன்றி தெரிவித்து கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் படக்குழுவினர் பத்திரைகையாளர்களை சந்தித்தனர். இதில் சிம்பு , நீரஜ் மாதவ் , ஒளிப்பதிவாளர் , சித்தார்த்தா, படத்தொகுப்பாளர், ஆண்டனி , தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோர் […]

You May Like