Kamal Haasan | ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சிகளுக்கு இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசன், இந்த முறை திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்த கமல், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ஆம் ஆண்டு துவக்க விழா சென்னையில் கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவின் போது கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் கூட்டணி குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, இரண்டு நாட்களில் நல்ல செய்தி வரும் என்று திங்கள்கிழமை கமல்ஹாசன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Read More : BJP Annamalai | கொங்கு மண்டலத்தை தட்டித்தூக்கிய பாஜக..!! திமுக – அதிமுகவுக்கு நடந்த பரிதாபம்..!!