fbpx

ரஜினி, விஜய்யை தாக்கி பேசிய கமல்ஹாசன்..? வெடித்தது புதிய சர்ச்சை..!!

நடிகர் கமல்ஹாசன் ரஜினிகாந்த், விஜய் படத்தைத் தாக்கி பேசியுள்ளதாக புது சர்ச்சை வெடித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் மற்றும் நடிகர் விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் இந்தாண்டு வெளியானது. இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளைப் பெற்று, படம் வெளியானதும் ஏமாற்றம் அளித்தது. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக உலகளவில் 600 கோடி ரூபாய்க்கும் மேல் பெற்றது. இந்தப் படங்களைத் தான் நடிகர் கமல்ஹாசன் மறைமுகமாகத் தாக்கி பேசியுள்ளார் என்ற விஷயம் புது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கடந்த வாரம் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், ‘எத்தனை நாள் 500 கோடி ரூபாய் படம் 600 கோடி ரூபாய் படம் எனக் கொண்டாடுவீர்கள்? உங்களுக்கு நல்ல படம் பார்க்க ஆசையே இல்லை. அந்த ஆசை இல்லை என்றால் இதுதான் கிடைக்கும்’ என பேசியிருந்தார். நடிகர் விஜயின் ‘லியோ’ மற்றும் ’ஜெயிலர்’ படங்களைத் தாக்கி மறைமுகமாக நடிகர் கமல் இப்படி பேசியுள்ளார் என ரசிகர்கள் காட்டமாக கூறி வருகின்றனர்.

Chella

Next Post

”அந்த ரகசியங்களை அவிழ்த்துவிட்டால், எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்வார்”..!! எச்சரிக்கும் ஓபிஎஸ்..!!

Tue Dec 26 , 2023
நான் சில விஷயங்களை சொன்னால், எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்கு சென்றுவிடுவார் என ஓ.பன்னீர்செல்வம் எச்சரித்துள்ளார். கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் இன்று காலை தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமியின் அதிகாரபோதையால் தான் அதிமுக கடந்த கால தேர்தல்களில் தோற்றது. அதிமுக தொண்டர்களால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம். எங்கள் பக்கம் தொண்டர்கள் இருக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி பக்கம் குண்டர்கள் மட்டுமே இருக்கின்றனர். […]

You May Like