fbpx

LOK SABHA | “சாயம் வெளுத்துப் போச்சு” – நடிகர் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்த வானதி சீனிவாசன்.!

வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இணைந்திருக்கிறது. இன்று காலை அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முதல்வர் மு.க ஸ்டாலினை அறிவாலயத்தில் சந்தித்து பேசினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தங்களது கட்சி வர இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியான இந்தியா கூட்டணியில் இணைந்து பயணிப்பதாக தெரிவித்தார். மேலும் தங்களது கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு சம்மதம் தெரிவித்த திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுடன் வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைச்சர் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் . இந்தக் கூட்டணி பதவிக்காக இல்லாமல் மக்களுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி எனவும் அவர் தெரிவித்திருந்தார். கமல்ஹாசனின் இந்த முடிவிற்கு கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேட்டி அளித்த அவர் கமல்ஹாசனின் சாயம் வெளுத்துப் போனதாக விமர்சித்திருக்கிறார். மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறேன் என நாடகமாடிய கமல்ஹாசன் தற்போது ராஜ்ய சபா எம்பி பதவிக்காக திமுகவுடன் இணைந்திருப்பதாக விமர்சித்திருக்கிறார். மேலும் இதுவரை லஞ்சம் வாரிசு அரசியல் ஊழல் என அவர்களை விமர்சித்தவர் என்பியாக வேண்டும் என்று ஆசையில் திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் எனவும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Next Post

ELECTION 2024 | திமுக - காங் தொகுதி உடன்பாடு.! 10 தொகுதிகளில் களமிறங்கும் காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sat Mar 9 , 2024
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது தமிழகத்தில் திமுக தலைமையில் காங்கிரஸ் விசிக மதிமுக மனிதநேய மக்கள் கட்சி கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியில் போட்டியிட இருக்கிறது. இதில் பெரும்பாலான கட்சிகளுடன் திமுகவிற்கு தொகுதி பங்கீடு ஏற்பட்டிருக்கிறது. மேலும் கூட்டணி கட்சிகளுக்கும் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி […]

You May Like