fbpx

அதுக்குள்ள கமலுக்கு மத்திய அமைச்சர் பதவியா..? திமுக போடும் பக்கா பிளான்..!! குஷியில் மக்கள் நீதி மய்யம்..!!

தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்காக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. மற்றொரு பக்கம் காங்கிரஸ் – திமுக ஆகியவை சேர்ந்து பிரம்மாண்டமாக இந்தியா என்ற கூட்டணியை தேசிய அளவில் உருவாக்கியுள்ளது. இந்த இந்திய கூட்டணியில் இணைந்து திமுக தலைமையின் கீழ் தமிழ்நாட்டில் மக்கள் நீதி மய்யம் லோக்சபா தேர்தலை சந்திக்க வாய்ப்புகள் உள்ளன.

கடந்த சில நாட்களாக வரக்கூடிய கருத்து கணிப்பு செய்திகளும் கூட இந்த இந்திய கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாகவே வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில்தான், தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் கோவையில் போட்டியிடுவேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அதன்படி, தனது நிர்வாகிகளுடன் ஆலோசித்த கமல்ஹாசன், கோவையில் போட்டியிட உள்ளதாக உறுதி செய்திருக்கிறார். மேலும், கூட்டணிக்கு அழைப்பிதழ் ரெடியாகி விட்டது என்றும் கூறி உள்ளார்.

அவர் கோவையில் போட்டியிடும் பட்சத்தில் ஏற்கனவே கோவையில் போட்டியிட அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். இதனால், அண்ணாமலை – கமல்ஹாசன் இடையே பலத்த போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவை இல்லையென்றால் பாரி வேந்தர் தொகுதியில் போட்டியிட்ட பெரம்பலூர் தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட எம்பி பாரிவேந்தர், கடந்த சில நாட்களாக திமுகவை நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கி பேசி வந்தார். அதோடு இவர் பாஜகவுடன் நெருக்கமும் காட்டி வந்தார். தமிழ்நாட்டில் திமுக 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 38இல் வென்றது.

இதில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட இந்திய ஜனநாயக கட்சி எம்பி பாரிவேந்தர், பாஜகவுடன் நெருக்கம் காட்டி வந்தார். இவர் என்னதான் ஐஜேகே கட்சியாக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் இவர் திமுக எம்பிதான். சமீபத்தில் இவர் பிரதமர் மோடியை நேரடியாக பாராட்டினார். அதோடு திமுகவை கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில்தான், கோவையில் மீண்டும் போட்டியிட சிபிஎம் விரும்பும் பட்சத்தில், பெரம்பலூர் தொகுதியில் கமல்ஹாசன் இறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதோடு, கமல்ஹாசன் இங்கே வெற்றிபெறும் பட்சத்தில் அவருக்கு, இந்தியா கூட்டணியும் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் மத்திய அமைச்சர் பதவியை கொடுக்க காங்கிரசுக்கு திமுக பிரஷர் கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளன.

Chella

Next Post

மாலத்தீவு: சீன ஆதரவு, அதிபர் முய்ஸூவுக்கு எதிராக குற்றச்சாட்டுத் தீர்மானம் தாக்கல்..?எதிர்க்கட்சிகள் முடிவால் திடீர் பரபரப்பு.!

Mon Jan 29 , 2024
மாலத்தீவு நாட்டின் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டுள்ள மாலத்தீவு ஜனநாயக கட்சி அந்த நாட்டின் அதிபர் முகமது முய்ஸுவை பதவி நீக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக அங்கிருந்து வரும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. மாலத்தீவு நாடாளுமன்றத்தில் சீனாவின் ஆதரவு பெற்ற ஜனாதிபதியான முகமது முய்சுவின் அமைச்சரவையில் புதிதாக நான்கு அமைச்சர்களை நியமிப்பது தொடர்பாக ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி எம்பிக்களுக்கும் இடையே முதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் […]

You May Like