காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ராவில் கலந்து கொண்ட தனது கட்சி நிர்வாகிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி ஒன்றை கமலஹாசன் ஏற்பாடு செய்திருந்தார். சென்னையில் இருக்கும் ஒரு தனியார் மண்டபத்தில்தான் இந்த நிகழ்ச்சி நடக்கின்றது.
இதில் மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமலஹாசன் கலந்து கொண்டு தனது கட்சி நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது பேசிய அவர், “தமிழர்களுடைய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நம் கட்சியின் சார்பில் சென்னையில் நடத்த திட்டமிட்டு இருக்கின்றோம். இதற்காக, முதல் கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
சென்னையில் இருக்கும் மெரினா கடற்கரையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். கூடிய விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.