fbpx

’கமலே போய்டாரு’..!! ’இதுக்கும் மேல பிக்பாஸ் நடக்குமா’..? விஜய் டிவி வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை இந்தாண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கவில்லை. ஏற்கனவே கமிட்டான திரைப்படங்களில் பிஸியாக இருப்பதால், தன்னால் இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாது என கமல்ஹாசன் அறிவித்துவிட்டார். கமல் இல்லாததால் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்குமா? இல்லையா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், விஜய் டிவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த பதிவில், ”அன்புள்ள கமல் சார். கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உங்கள் அசாதாரண பங்களிப்பிற்கு ஸ்டார் விஜய்யின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, கவர்ச்சியான இருப்பு மற்றும் போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் இருவருடைய உண்மையான ஈடுபாடு ஆகியவை நிகழ்ச்சியை மகத்தான வெற்றி அடையச் செய்ததில் முக்கிய பங்காற்றியுள்ளன.

பிக்பாஸ் தமிழை இந்தியாவின் முதன்மையான ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றாக தனித்து நிற்க வைத்துள்ளது. சினிமா கடமைகள் காரணமாக ஓய்வு எடுப்பதற்கான உங்கள் முடிவால் நாங்கள் வருத்தமடைந்தாலும், உங்கள் முயற்சிகளை புரிந்து கொண்டு ஆதரிக்கிறோம். ஆனால், பிக்பாஸ் தமிழில் தொகுப்பாளராக உங்கள் மரபு எங்களுக்கும், பார்வையாளர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.

உங்கள் சினிமா முயற்சிகள் மற்றும் உங்கள் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். பிக்பாஸ் தமிழில் இந்த சீசன் நீங்கள் நிறுவிய வலுவான அடித்தளத்தின் மீது தொடர்ந்து செழித்து வளரும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்று பதிவிடப்பட்டுள்ளது. அந்த வகையில், கண்டிப்பாக இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கும் என்று சேனல் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : பெண்களுக்கான சூப்பர் சேமிப்புத் திட்டம்..!! ரூ.1,000 முதலீடு செய்தால் போதும்..!! வங்கிக் கணக்கில் பணம் கொட்டும்..!!

English Summary

Will Bigg Boss show happen this time due to Kamal’s absence? Isn’t it? Many people are questioning that.

Chella

Next Post

பூமியைத் தாக்கும் புவி காந்தப் புயல்..!! அலெர்ட் செய்யும் விஞ்ஞானிகள்.. என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா?

Fri Aug 9 , 2024
A series of powerful solar events is set to impact Earth, potentially triggering significant geomagnetic storms over the next few days.

You May Like