fbpx

அடக்கடவுளே.‌.! காஞ்சிபுரத்தில் உடைக்கப்பட்ட ஏரி… ஊருக்குள் புகுந்த தண்ணீர்..! மின்சாரம் அனைத்தும் துண்டிப்பு…!

காஞ்சிபுரம் மாவட்டம் நடுவீரப்பட்டு ஏரி உடைக்கப்பட்டதை அடுத்து எந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஏரிகள் நிரம்பியது. காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள ஏரியும் முழு அளவில் நிரம்பி காணப்பட்டது. இந்த ஏரியின் மதகு பகுதி சேதம் அடைந்து இருந்ததால் பாதுகாப்புக்காக மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று ஏரியின் மதகு அருகே கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.

இதனால் ஏரியில் இருந்த தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது. இந்த தண்ணீர் நடுவீரப்பட்டு, திருவஞ்சேரி கிராமங்களுக்குள் பாய்ந்தது. அதிகாலை நேரம் என்பதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த பின்னரே வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே வந்தனர்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் நடுவீரப்பட்டு ஏரி உடைக்கப்பட்டதை அடுத்து அந்த ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள எட்டியாபுரம், குறிஞ்சி நகர், எம்ஜிஆர் நகர் பகுதியில் மின்சாரத்தை துண்டிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏரியை உடைத்தவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Vignesh

Next Post

ஈஸியான வழி... இந்த நம்பருக்கு ஒரே ஒரு கால் செய்தால் போதும்...! கேஸ் சிலிண்டர் புக் ஆகி‌‌விடும்...! முழு விவரம்

Wed Dec 13 , 2023
ஒரு குடும்பத்திலும் சமையல் கேஸ் சிலிண்டர் என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. அத்தகைய கேஸ் சிலிண்டரை நீங்கள் மொபைல் நம்பர் பயன்படுத்தி எப்படி புக் செய்வது…? கேஸ் சிலிண்டர் பெயர் மாற்றம் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். மொபைல் நம்பர் மூலம் எப்படி முன்பதிவு செய்வது: Indane Gas வாடிக்கையாளர்கள் 7588888824 என்ற எண் மூலம் சிலிண்டரை முன்பதிவு செய்யலாம். நீங்கள் HP கேஸ் வாடிக்கையாளராக […]

You May Like