fbpx

திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆகிறார் கனிமொழி..? பொதுக்குழுவில் வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி, துணைப் பொதுச்செயலாளராகவுள்ளார். இதற்கான அறிவிப்பு நாளை மறுநாள் நடைபெற உள்ள திமுக பொதுக்குழுவில் இருக்கும் என்று திமுக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியில் இருந்தும், அரசியலில் இருந்தும் விலகுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இதையடுத்து, மகளிர் ஒருவர் துணைப் பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என்ற திமுகவின் சட்ட விதியின் காரணமாக அந்த பொறுப்பு மகளிர் ஒருவருக்கு வழங்கப்படும் என கூறப்பட்டது.

திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆகிறார் கனிமொழி..? பொதுக்குழுவில் வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

இந்நிலையில், திமுக பொதுக்குழு அக்டோபர் 9ஆம் தேதி கூடும் நிலையில், துணைப் பொதுச்செயலாளராக கனிமொழியை அறிவிக்க திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாக தெரியவருகிறது. கடந்த 2015 முதல் திமுகவின் மகளிரணி செயலாளராக உள்ள கனிமொழி, தூத்துக்குடி மக்களவை உறுப்பினராக தற்போது பணியாற்றி வருகிறார். இதையடுத்து, இவர் வகித்து வரும் மகளிர் அணி செயலாளர் பொறுப்பு வேறொரு மகளிருக்கு வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Chella

Next Post

கமலின் ’ஹே ராம்’ படத்தில் நடித்த பழம்பெரும் நடிகர் திடீர் மரணம்..!! சோகத்தில் திரையுலகம்..!!

Fri Oct 7 , 2022
பாலிவுட்டில் பல்வேறு பிளாக்பஸ்டர் படங்களில் நடித்தவரும், தமிழில் கமலின் ’ஹே ராம்’ படத்தில் பணியாற்றியவருமான நடிகர் அருண் பாலி காலமானார். அவருக்கு வயது 79. பழம்பெரும் பாலிவுட் நடிகரான அருண் பாலி Myasthenia Gravis என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இது நரம்புகள் மற்றும் தசைகளுக்கு இடையேயான தொடர்பு செயலிழப்பால் ஏற்படும் ஒரு நோயாகும். இதற்காக அவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை […]
கமலின் ’ஹே ராம்’ படத்தில் நடித்த பழம்பெரும் நடிகர் திடீர் மரணம்..!! சோகத்தில் திரையுலகம்..!!

You May Like