கன்னியாகுமரி மாவட்ட எல்லை பகுதியான களியக்காவிளை அருகே இருக்கின்ற பரசு வைத்தல் பகுதியில் இரயில் தண்டவாளத்திலிருந்து பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் சடலமாக மீட்க்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், கொல்லங்கோடு அருகே இருக்கின்ற ஊரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் – அக்ஷால் தம்பதியின் மகள்தான் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரிய வந்தது. இவர் பளுகால் மேல்நிலைப் பள்ளியில் இந்த வருடம் தான் 10ம் வகுப்பில் புதிதாக சேர்ந்து இருக்கிறார்.
நாள்தோறும் பேருந்தில் பள்ளிக்கு செல்லும் இந்த மாணவி, திடீரென்று இது போன்ற ஒரு விபரீத முடிவை மேற்கொண்டுள்ளார் அதோடு காவல்துறையினர் நடத்திய சோதனையில், அவரது பையில் ஒரு கடிதம் கிடைத்திருக்கிறது. அதில் அவருடைய தாயின் செல் போன் என்னை எழுதி வைத்து என்னுடைய சடலத்தை ஒப்படைத்து விடுங்கள் என்று எழுதியிருக்கிறார் அந்த மாணவி.
அவர் தற்கொலை தான் செய்திருக்கிறார் என்பதை உறுதி செய்த காவல்துறையினர், அதற்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.