கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் குழித்துறை பகுதிக்கு அருகே கழுவன்திட்டை ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. இந்த தண்டவாளத்தில் 60 அடி உயரத்திலிருந்து ஒரு நபர் மது போதையில் தவறி விழுந்துள்ளார்.
இதையடுத்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் விரைந்து வந்து அந்த போதை நபரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை சம்பந்தப்பட்ட விபத்து நடந்த இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் அளவிற்கு ஸ்ட்ரெச்சரில் சுமந்து கொண்டு அதன் பின் ஆம்புலன்ஸ் மூலம் தான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில் கீழே விழுந்த அந்த போதை ஆசாமி மருதங்கோடு பகுதியைச் சேர்ந்த சிங் என்பதும், அவர் ரயில்வே தண்டவாளத்திற்கு மேல் அமைக்கப்பட்டு இருந்த பாலத்தில் அமர்ந்தவாறு மது அருந்திவிட்டு அங்கிருந்து கீழே தவறி விழுந்தார் என்பதும் தெரிய வந்துள்ளது.