fbpx

Kanya Sumangala Yojana:பெண் குழந்தைகளுக்கு இப்படியொரு திட்டமா?… இனி ஆண்டுக்கு ரூ.25000 உதவித்தொகை!… யாருக்கெல்லாம் கிடைக்கும்?

Kanya Sumangala Yojana: பெண்குழந்தைகள் பிறப்பு முதல் பட்டப்படிப்பை முடிக்கும்வரை அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.25,000 உதவித்தொகை கிடைக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் கன்யா சுமங்கலா யோஜனா திட்டம். கன்யா சுமங்கலா யோஜனா திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் 2014 ஆம் ஆண்டு பேட்டி பச்சாவோ-பேட்டி படாவோ என்ற பிரச்சரத்தில் பேசப்பட்டது. அதன்பின் உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யனாவால் 2017 ஆம் ஆண்டின் தொடங்கப்பட்டது. முதல்வர் யோகியின் கூற்றுப்படி, இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 17 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்குழந்தைகளுக்கு அவரது அரசாங்கம் ரூ.15,000 வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்குமுன் இத்திட்டம் மூலம் அரசு பெண் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 15,000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கி வந்தது. ஆனால், தற்போது அந்த மானியத்தை ரூ.25,000 ஆக உயர்த்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அடுத்த ஆண்டு முதல் 6 கட்டங்களாக ரூ.25,000 மானியமாக வழங்கப்படும். பெண் குழந்தை பிறந்தவுடன் பயனாளிகளின் கணக்கில் ரூ.5,000 மாற்றப்படும். மகளுக்கு ஒரு வயது ஆகும் போது, 2000 ரூபாயும், அதே போல், மகள் முதல் வகுப்புக்கு சென்றவுடன், 3,000 ரூபாயும் வழங்கப்படும்.

உங்கள் பெண் குழந்தை ஆறாம் வகுப்பில் சேரும்போது ரூ.3,000 கணக்கில் மாற்றப்படும். ஒன்பதாம் வகுப்புக்கு செல்லும் போது ரூ.5,000 மற்றும் மகள் பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்புகளை முடிவு செய்தால், ரூ.7,000 கணக்கில் மாற்றப்படும். ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தாலும் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள் ஆவர். ஆனால் இது தமிழ்நாட்டில் இல்லை. இத்திட்டம் தற்பொழுது உத்திரபிரதேசத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்கு மட்டுமே கிடைக்கும்.

English summary:Henceforth stipend of Rs.25000 per annum

Readmore:https://1newsnation.com/the-work-of-the-head-of-the-family-is-no-less-than-that-of-women-who-go-to-work-supreme-court/

Kokila

Next Post

சூப்பர் அறிவிப்பு...! நடப்பாண்டிலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள்...!

Tue Feb 20 , 2024
2024- 25ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” என்ற திருக்குறளுடன் வேளான் பட்ஜெட்டை உரையை தொடங்கினார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். 2020-2021ம் ஆண்டில் 152 லட்சம் ஏக்கராக இருந்த வேளாண் சாகுபடி பரப்பு, தற்பொழுது 155 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. வேளாண் பணிகளுக்கான ஊதியம் தற்போது அதிகமாக உள்ளது. இதனை […]

You May Like