fbpx

கர்நாடக சட்டமன்ற தேர்தல்..!! மாலை 4 மணி நிலவரப்படி 86 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி..!!

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் மாலை 4 மணி நிலவரப்படி 86 தொகுதிகளில் வெற்றி மற்றும் 50 தொகுதிகளில் முன்னிலையுடன் காங்கிரஸ் உள்ளது.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி காலை முதல் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. மாலை 4 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 86 இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 50 தொகுதிகளில் அந்த கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 44 தொகுதிகளில் வெற்றி பெற்றதோடு, 20 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 15 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், 5 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. 2 சுயேட்சைகளும், கல்யாண ராஜ்ய பிரகதி பக்ச கட்சி ஒரு தொகுதியிலும், சர்வோதய கர்நாடக பக்ச கட்சி தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன.

Chella

Next Post

ரூ.5 லட்சம் வரம்பில் இலவச கிரெடிட் கார்டு வேண்டுமா..? இவ்வளவு ஆஃபர்களா..? எப்படி வாங்குவது..?

Sat May 13 , 2023
முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் வங்கி, ஏர்டெல் உடன் கைக்கோர்த்துள்ளது. இதன் ஒரு பகுதியாக இரு நிறுவனங்களும் கிரெடிட் கார்டு ஒன்றை வழங்குகின்றன. அதன் பெயர் ஏர்டெல் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு. இந்த அட்டையை நீங்கள் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். இது வரையறுக்கப்பட்ட கால சலுகையாகும். இந்த ஒப்பந்தம் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும். இந்த சலுகை மே 31ஆம் தேதி வரை மட்டுமே. இந்த […]

You May Like