சிபிஐயின் புதிய இயக்குனராக கர்நாடகா மாநில தலைமை காவல் அதிகாரி பிரவீன் சூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக கேடரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான பிரவீன் சூட், மத்திய புலனாய்வுப் பிரிவின் இயக்குநராக உயர்மட்ட தேர்வுக் குழுவால் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது கர்நாடகாவில் காவல்துறை தலைமை இயக்குநராக பணியாற்றுகிறார், பிரவீன் சூட் தனது பணியில் அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் கொண்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர், அடுத்த சிபிஐ இயக்குநராக சூட்டை நியமிப்பதற்கு ஒருமனதாக ஒப்புக்கொண்டனர். சனிக்கிழமை மாலை நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சிபிஐ இயக்குநரான சுபோத் குமார் ஜெய்ஸ்வாலின் பதவிக்காலம் மே 25ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் பிரவீன் சூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.