கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 10-ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 58,545 வாக்குப்பதிவு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது.73.19 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்த நிலையில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. காலை 10 மணி முதல் முன்னிலை விவரம் வெளியாகி 12 மணிக்குள் பெரும்பாலான முடிவுகள் அறிவிக்கப்படும்.
பாஜக 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 207 தொகுதிகளிலும் , ஆம் ஆத்மி 217 தொகுதிகளிலும் , பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளில் போட்டியிட்டன. 918 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 2,613 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். முடிவுகளில் யாரும் முன்னிலை வகித்த ஆட்சி நோக்கிப் பாருங்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.