fbpx

இது கர்நாடக அரசின் சதி உடனே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுங்கள்……! அன்புமணி ராமதாஸ் முதல்வருக்கு வேண்டுகோள்…..!

மேகதாது அணை விவகாரம் குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக விவாதம் செய்ய உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேகதாது அணை விவகாரம் குறித்து தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதாக கர்நாடக நீர் பாசனத்துறை அமைச்சர் டி.கே சிவகுமார் குற்றம் சாட்டி இருப்பது அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருக்கிறது. முதல்மடை பாசன மாநிலத்திற்கும், கடைமடை பாசன மாநிலத்திற்கும் இடையிலான வேறுபாடுகளை தெரிந்து கொள்ளாமல் 2 மாநில மக்களிடையே பகையை உண்டாக்க கர்நாடக அமைச்சர் சதி செய்து வருவது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இரண்டாம் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டமானது சட்டவிரோதமாக செயல்படுத்தப்படுகிறது. என்று சொல்வதே அப்பட்டமான பொய் என்று கூறியுள்ளார். 2ம் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழகத்திற்கு வழங்கப்படும் தண்ணீரை வைத்து தான் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே சமயத்தில் மேகதாது அணைக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசை tk சிவகுமார் வலியுறுத்தி வருவது தான் சட்டவிரோதமானது காவேரி ஆறு மாநிலங்களுக்கு இடையில் பாயும் ஆறு என்பதால் கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் அனுமதி இருந்தால் மட்டும் தான் கர்நாடக அரசால் அணைக்கட்ட இயலும், இதை மத்திய அரசு பலமுறை உறுதி செய்திருக்கிறது. இருந்தாலும், தமிழகத்தின் அனுமதி இன்றி காவிரியில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடகா அரசு நினைத்து கூட பார்க்க இயலாது இது கர்நாடக மாநில அரசுக்கும் நன்றாகவே தெரிந்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதோடு மேகநாதன் அணை விவகாரத்தில் விதிகளும் நீதிமன்ற தீர்ப்புகளும் தமிழகத்திற்கு சாதகமாகவே இருக்கிறது. ஆனாலும் அதனை மதிக்காமல் கர்நாடக அரசு இரண்டு மாநில மக்களுக்கு இடையில் பகை நெருப்பை மூட்டி குளிர்காய வேண்டும் என்று நினைக்கிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

மேகதாது ஆணையை தடுப்பது மட்டுமல்லாமல் தமிழகத்திற்கான குடிநீர் திட்டங்களை துரிதப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது குறித்தான அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக விவாதம் செய்ய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக பூட்ட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Next Post

குடும்ப தகராறில் ஏற்பட்ட விபரீதம்….! மனைவியின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்த கணவன் திருப்பூரில் பரபரப்பு….!

Sat Jul 1 , 2023
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில், 2வதாக பவித்ரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதோடு பவித்ராவிற்கும் இது 2வது திருமணம் என்று கூறப்படுகிறது. இந்த தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தான் கடந்த சில தினங்களாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் நடைபெற்ற […]

You May Like