fbpx

திருமணம் செய்துகொள்ளமாறு கேட்ட கள்ளக்காதலன்..! மறுத்த 2 குழந்தைகளின் தாய்..! இறுதியி நடந்த விபரீதம்..!

திருமணம் செய்ய மறுத்த இரண்டு குழந்தைகளின் தாயை கொடூரமாக கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு எடியூரில் வசித்து வருபவர் கிரீஷ் என்ற ரியான் கான்(35). கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் கொல்கத்தாவை சேர்ந்த கணவரை இழந்த பரிதா கானம்(42). இவர் ஜெயநகரில் உள்ள மசாஜ் சென்டரில் பரிதா கானம் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு 2 பிள்ளைகள் உள்ளது. இந்நிலையில் அந்த பெண்ணுடன் ரியான் கானுக்கு  பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறிதால், பரிதா கானத்தை திருமணம் செய்துகொள்ள கிரீஷ் முடிவு செய்தார்.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள ஷாலினி பூங்காவில், திருமணம் தொடர்பாக இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மசாஜ் சென்டர் வேலையே விட்டுவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கிரீஷ் கூறியுள்ளார். ஆனால், தனக்கு 2 குழந்தைகள் இருப்பதால் திருமணம் செய்ய முடியாது என பரிதா கானம் திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

இதனால், ஆத்திரமடைந்த கிரீஷ் தான் மறைத்து வைத்த கத்தியால் முகம், வயிறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த பரிதா கானம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் நடந்த சம்பவத்தை கூறி காவல் நிலையத்தில் சரணடைந்த கிரீஷை போலீசார் கைது செய்தனர்.

Rupa

Next Post

தமிழகத்தை மிஞ்சும் அறிவிப்பு..!! மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.8,500..!! விவசாய கடன்கள் தள்ளுபடி..!!

Wed Apr 3 , 2024
தெலங்கானா மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக அவருடைய தங்கை சர்மிளாவுக்கு மாநில தலைவர் பதவி கொடுத்து தேர்தல் களத்தில் இறக்கி உள்ளது. சர்மிளா, அண்ணன் என்று கூட பார்க்காமல் ஜெகன்மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அவர் மூலம் ஜெகன்மோகன் ரெட்டியை வீழ்த்த காங்கிரஸ் துடிக்கிறது. இந்நிலையில், பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை சர்மிளா வெளியிட்டார். அதில் […]

You May Like