fbpx

Karnataka | ‘எஸ்.சி/எஸ்.டி’ சமூகம் குறித்து மிரட்டல் வீடியோ.!! பாஜக தலைவர்கள் நேரில் ஆஜராக சம்மன்.!!

Karnataka: எஸ்.சி, எஸ்.டி சமூகத்தினரை ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்கக் கூடாது என்று மிரட்டும் வகையில் சமூக ஊடகத்தில் பதிவு செய்தது தொடர்பாக பாஜக தலைவர் ஜேபி நட்டா, அக்கட்சியின் ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா மற்றும் கர்நாடக பிரிவு தலைவர் பி.ஒய் விஜயேந்திரா ஆகியோருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டு 2 நாட்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எஸ்சி/எஸ்டி சமூகத்திற்கு எதிராக கர்நாடக(Karnataka) பாஜக வெளியிட்ட ட்வீட் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா மற்றும் பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா ஆகியோர் ஏழு நாட்களுக்குள் பெங்களூரு ஹை கிரவுண்ட் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகுமாறு கர்நாடக காவல்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது.

முன்னதாக கர்நாடக பாஜகவின் அதிகாரப்பூர்வ X சமூக ஊடக ஹேண்டிலில் எஸ்.சி மற்றும் எஸ்.டி சமூகத்தினர் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்கக் கூடாது என மிரட்டும் தோரணையில் வீடியோ ஒன்று பதிவு செய்யப்பட்டு இருந்தது. அந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பாஜகவின் தேசிய தலைவர், ஐடி பிரிவு தலைவர் மற்றும் கர்நாடக பாஜக தலைவர் ஆகியோர் மீது கர்நாடக போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்தனர்.

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கர்நாடகா காங்கிரஸ் கமிட்டியும் பாஜக தலைவர்கள் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது. இந்திய தண்டனைச் சட்டத்தின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் பிரிவு 505 (2) (வகுப்புகளுக்கு இடையே பகை, வெறுப்பு அல்லது தவறான எண்ணத்தை உருவாக்கும் அல்லது ஊக்குவிக்கும் அறிக்கைகள்) ஆகியவற்றின் கீழ் பாஜக தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Read More: கஞ்சாவுடன் சிக்கிய சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்! கோர்ட் அதிரடி..

Next Post

இந்தியாவில் அறிமுகமானது Google Wallet ஆப்! இதில் இத்தனை அம்சங்கள் இருக்கா?

Wed May 8 , 2024
கூகுள் நிறுவனம் இந்தியாவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கூகுள் வாலெட் ஆப் வசதியை அறிமுகம் செய்துள்ளது. டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள், லாயல்டி கார்டுகள், கிஃப்ட் கார்டுகள் போன்றவற்றைச் சேமிக்க அனுமதிக்கிறது கூகுள் வாலெட் ஆப். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மொபைல் பேமென்ட் அம்சங்கள் நமது பணப் பரிவர்த்தனை முறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக google நிறுவனத்தின் பணப் பரிவர்த்தனை செயலியான google pay அறிமுகமானதிலிருந்து மக்கள் மத்தியில் பிரபலமாக […]

You May Like