fbpx

கருணாநிதிக்கு சமாதி வைத்ததே அதிகம்..!! பேனா தேவையா??மக்கள் காசை வீணடிக்க கூடாது சீமான் காட்டம்…

சென்னை, திமுக அரசு தற்போது கருணாநிதி நினைவாக சென்னை கடற்கரையில் பேனா சிலை வைப்பதாக கூறியுள்ளது. அதை விமர்சித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘அண்ணாதுரைக்கு மூக்குப்பொடி டப்பா, எம்ஜிஆருக்கு தொப்பி, ஜெயலலிதாவுக்கு மேக்அப் பெட்டி சிலையும் கடலுக்குள் வைப்பீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

கொசஸ்தலை ஆறும், பக்கிங்காம் கால்வாயும் எண்ணூர் முகத்துவாரத்தின் ஆற்றின் குறுக்கே உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்காக சாலைகள் போடப்பட்டு, கான்கிரீட்டுகள் போடப்பட்டு வருகின்றன. இதனை ஜூலை 31-ஆம் தேதிக்குள் அகற்றாவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து எண்ணூர் பஜாரில் சீமான் தலைமையில் அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் கூறியது,

இந்தியா 110 லட்சம் கோடி கடன் வைத்துள்ளது. தமிழகத்திற்கு 7 லட்சம் கோடி கடன் இருக்கிறது. இந்த கடன் சதவீத உயர்வுதான் ஆட்சியாளர்கள் காட்டுகின்ற, கட்டமைக்க நினைக்கின்ற வளர்ச்சி. தமிழகத்தில் 10 ஆயிரம் அரசுப் பள்ளிக்கள் இடியும் நிலையில், சீரமைக்கபடாமல் இருக்கிறது. அந்தந்த ஊர்களில் இருக்கும் தொழிலதிபர்களிடம் பணம் வாங்கி சீரமைக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்ததாக அவர்களிடமே ஊதியம் பெற்றுக் கொள்ளும்படி கூறுவீர்களா?

இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும் போது கருணாநிதிக்கு 80 கோடி ரூபாய்க்கு கடலுக்குள் பேனா வைக்கிறேன் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்? அப்படியெனில் அண்ணாதுரை அடிக்கடி மூக்குப்பொடி போடுவார். அதனால் கடலுக்குள் பொடி டப்பா சிலையும், எம்ஜிஆர்.,க்கு நினைவாக தொப்பியும், ஜெயலலிதா திரைப்பட துறையில் மேக்அப் பெட்டியை அதிகம் பயன்படுத்தினார் என்பதற்காக அவரது நினைவாக மேக்அப் பெட்டி சிலையும் கடலுக்குள் வைப்பீர்களா? உங்களுக்கெல்லாம் (கருணாநிதிக்கு) சமாதி வைத்ததே அதிகம். தேவை இல்லாத ஆட்டமெல்லாம் ஆடக்கூடாது. மக்கள் காசை வீணடிக்கக்கூடாது, ஆட்சி நடத்துங்கள். இவ்வாறு சீமான் கூறினார்.

Baskar

Next Post

செஸ் ஒலிம்பியாட்..! உலக சாம்பியன் விஸ்வநாதனை கேள்விகளால் திணற வைத்த 8 வயது சிறுமி..!

Mon Aug 1 , 2022
உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்திடம் 8 வயது இரட்டை சிறுமிகள் கேட்ட கேள்வியால் அவர் திகைத்து போனார். மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கலை கட்டி வருகிறது. மூன்று சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். போட்டியில் இடையிடையே விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட சர்வதேச பிரபலங்களுடன் கேள்வி நேரத்தில் பங்கேற்கும் வாய்ப்பானது கிடைக்கும். அந்த வகையில், நேற்று ஐந்து முறை […]
செஸ் ஒலிம்பியாட்..! உலக சாம்பியன் விஸ்வநாதனை கேள்விகளால் திணற வைத்த 8 வயது சிறுமி..!

You May Like