fbpx

திடீர் டுவிஸ்ட்…!திமுக கூட்டணிக்கு கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரவு…!

திமுக கூட்டணிக்கு கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரவு. பாஜக எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த, அடிமை அதிமுகவை விரட்ட, நாம் ஒரு குடையின் கீழ் அணியமாக வேண்டியிருக்கிறது என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; பா.ஜ.க. எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த அடிமை அதிமுகவை விரட்ட, நாம் ஒரு குடையின் கீழ் அணியமாக வேண்டியிருக்கிறது. அதற்கான களமாக இந்த நாடாளு மன்றத்தேர்தலை பயன்படுத்தி நாட்டை காக்கவேண்டும். மதவெறி சக்திகளை அடியோடு வீழ்த்தி, இந்தியாவில் மதநல்லிணக்கம், மக்கள் ஜனநாயகத்தை மீட்க, சமூக நீதியை காக்க ‘இந்தியா கூட்டணியை 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டும் என்கிற ஒற்றை இலக்குடன் தி.மு.கவை முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரிக்கிறது.

இனி மோடி ஆட்சி மீண்டும் வந்தால் இந்திய பெருமுதலாளிகளின் கையில் கார்ப்ரேட்டின் கொள்ளைக் கூடாரமாகிவிடும். கடந்த 10 ஆண்டுகாலமாக மத்தியில் ஆட்சி செய்த பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத ஆட்சியை அகற்றிட, தமிழ்நாட்டில் அடிமை துரோகக் கட்சியான அ.தி.முக வை இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடித்திட நமக்கு கிடைத்த சரியான வாய்ப்பாகும்.

தி.மு.க.விற்கு பல்வேறு தோழமைக் கட்சிகள் தமது ஆதரவை தெரிவிக்கும் அதே வேளையில் பலம் வாய்ந்த இக் கூட்டணியை 40 இடங்களிலும் வெற்றிப்பெற செய்ய திமு.க.விற்கு எங்களது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம். மக்கள் விரோத சனாதன சக்திகளை விரட்ட, அடிமை துரோக அ.தி.மு.க.வை வீழ்த்த திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து 40 தொகுதிகளிலும் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி தனது பிரச்சாரத்தை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா..? மக்களவை தேர்தலால் வந்த புதிய சிக்கல்..!! அப்படினா அந்த ரூ.1,000..?

Thu Mar 21 , 2024
புதிய ரேஷன் கார்டுகளுக்கு, விண்ணப்பித்துவிட்டு நீண்ட காலமாகவே காத்திருக்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தில், 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் காரணமாக, புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால், புதிய ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்தவர்கள் அதிருப்திக்கும், ஏமாற்றத்துக்கும் ஆளானார்கள். புது கார்டுக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததுடன், ஒரு லட்சம் கார்டுகள் அச்சடிக்கப்படாமல் தேங்கி கிடந்தன. ரேஷன்தாரர்களால், பொருட்களையும் வாங்க முடியவில்லை. […]

You May Like