பெரியவர்கள் வண்டி ஓட்டினால் கவனக்குறைவு, பொறுப்பின்மை என்று கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், சிறுவர்கள் வாகனம் ஓட்டி, விபத்தை ஏற்படுத்தி அது மற்றவர்களின் வாழ்க்கையைச் சீரழிக்கும் நிலைக்குத் தள்ளப்படும்போது கொஞ்சம் பதற்றமாகவே இருக்கிறது. 18 வயது நிறைவடையாத சிறுவர்கள் கார்களை ஓட்டி, விபத்தை ஏற்படுத்துவது தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாட்டின் குமரி மாவட்டம் தமிழக – கேரள எல்லை பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பெல்டி அடித்து கவிழ்ந்த காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காரை 17 வயது சிறுவன் ஓட்டிச்சென்றுள்ளான். பாறசாலை பகுதியை சேர்ந்த இந்த சிறுவன் கடந்த 13ஆம் தேதி மாலை களியக்காவிளை நோக்கி காரை ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது, செங்கவிளை பகுதியில் வரும்போது கார் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்து சாலையில் நின்று கொண்டிருந்த கார் மீது மோதி சாலையின் நடுவே தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தை பார்த்த அங்கிருந்தவர்கள், பதறியடித்து கார் பக்கத்தில் வந்தபோது, கத்தி படத்தில் விஜய் வருவதுபோல், காருக்குள் இருந்து சிறுவன் வெளியே வந்து, பயத்தில் தெறித்து ஓடினான். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த விபத்து தொடர்பாக பாதிக்கப்பட்ட கார் உரிமையாளர் அபினேஷ், கொல்லங்கோடு காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன்பேரில் 17 வயது சிறுவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Read More : என்ன ஆச்சு..? தங்கம் விலையில் இப்படி ஒரு நிகழ்வா..? ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?