fbpx

399c, விற்பனைக்கு வந்தது கவாஸாகி நின்ஜா ZX-4R பைக்!… விலை எவ்வளவு தெரியுமா?… சிறப்பம்சங்கள் இதோ!

இந்திய சந்தையில் முதன்முறையாக 400cc பிரிவில் இன்லைன் 4 சிலிண்டர் என்ஜின் பெற்ற கவாஸாகி நின்ஜா ZX-4R பைக் விற்பனைக்கு வந்துள்ளது.

ரூ.8,49,000 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த பைக், முழுமையான எல்இடி ஹெட்லைட் கொண்டதாக உள்ளது. இந்திய சந்தையில் தற்போது, மெட்டாலிக் பிளாக் மட்டும் கிடைக்கிறது. மேலும், இதில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். நின்ஜா ZX-4R பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 399cc, இன்-லைன், நான்கு-சிலிண்டர், லிக்யூடு கூல்டு என்ஜின் ரேம் ஏர் உதவியுடன் 14,500rpm-ல் 80bhp மற்றும் 13,000rpm-ல் 39 Nm வெளிப்படுத்துகின்றது. இதில் ஆறு வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு க்விக் ஷிஃப்டரும் உள்ளது.

இசட்எக்ஸ்-4ஆர் பைக் மாடலில் நிசின் நிறுவன நான்கு-பிஸ்டன் ரேடியல் காலிப்பர்களுடன் முன்பக்கத்தில் ட்வீன் 290mm டிஸ்க் பிரேக்கிங் பெற்றும் பின்புறம் ஆக்சிஸ் மாஸ்டர் சிலிண்டரைப் பெற்று 220 mm டிஸ்க் உடன் இரட்டை சேனல் ஏபிஎஸ் உள்ளது. டயர் அளவுகள் 120/70-ZR17 முன் மற்றும் 160/60-ZR17 பின்புறம் பெற்றுள்ளது. 4.3-இன்ச் டிஎஃப்டி டேஷ்போர்டு, சொந்த த்ரோட்டில் மேப்பிங்குடன் ஒவ்வொன்றும் நான்கு பவர் (Sport, Road, Rain மற்றும் கஸ்டம்) மோடுகளை பெறுகிறது, மேலும் ரைடர் எய்ட்களில் டிராக்‌ஷன் கட்டுப்பாடு மற்றும் விரைவு ஷிஃப்ட்டர் ஆகியவை பெற்றுள்ளது.

Kokila

Next Post

பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா..!! தெறிக்கவிட்ட விராட் கோலி, கே.எல்.ராகுல்..!! அபார வெற்றி..!!

Tue Sep 12 , 2023
ஆசியக்கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆசியக்கோப்பை 2023 தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா பாகிஸ்தான் அணியை நேற்று எதிர்கொண்டது. இப்போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வெற்றி பெற்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா, சுப்மன் கில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் அடித்து வெளியேறினர். […]

You May Like