fbpx

“லிப் லாக் காட்சி இருந்தால், படத்தில் நடிக்க மாட்டேன்”; பிரபல நடிகையின் கொள்கையை புகழும் ரசிகர்கள்..

தமிழ் திரை உலகில் பல ரசிகர்களை கொண்ட நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பை சிலர் கேலி செய்தாலும், இவரது நடிப்பை ரசிக்கும் ரசிகர்களும் பலர் உள்ளனர். முன்னாள் நடிகை மேனகா சுரேஷின் மகளான கீர்த்தி சுரேஷ், தமிழ் மட்டுமன்றி தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தன் நடிப்பிற்காக பல்வேறு விருதுகளை வென்றவர் தான் கீர்த்தி சுரேஷ். பழம்பெரும் நடிகை சாவித்ரியின் கதையை வைத்து எழுதப்பட்ட மகாநதி திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது. ஆனால் கீர்த்திக்கு முதலில் திரைப்படத்துறையில் ஆர்வம் இல்லை.

பேஷன் டிசைனிங்கில் தான் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. பேஷன் டிசைனிங்கில் பட்டப்படிப்பைப் பெற்ற இவர், லண்டனில் 2 மாத பயிற்சி பெற்றார். இந்நிலையில், இவர் தனக்கென்று ஒரு சில கொள்கைகளை வைத்துள்ளார். ஆம், உதாரணமாக, 2021 ஆம் ஆண்டில், நித்தின் நடித்த தெலுங்கு திரைப்படமான மேஸ்ட்ரோ படத்தில் லிப்-லாக் காட்சி இருந்ததால் அந்த படத்தை அவர் நிராகரித்தார். இப்படி, நெருக்கமான காட்சிகளில் இவர் நடிக்க கூடாது என்ற கொள்கை பலரையும் கவர்ந்துள்ளது.

Read more: ஸ்ரீதேவி எப்பவுமே அதுல ரொம்ப கவனமா இருந்தாங்க.. இறப்புக்கு இதுதான் காரணம்.. உண்மையை உடைத்த போனி கபூர்..

English Summary

keerthy-suresh-rejects-intimate-scene

Next Post

உங்களுக்கு மன அழுத்தம் அதிகமா இருக்கா?? அப்போ இந்த தேநீரை குடித்து பாருங்கள்.. உங்களுக்கே வித்தியாசம் தெரியும்..

Sun Nov 24 , 2024
benefits-of-drinking-butterflypea-tea

You May Like