fbpx

Kerala | இனி ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சம ஊதியம்..!! முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு..!!

ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சம ஊதியம் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், ”சமீப காலம் வரை பெண்களின் கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஆனால், இனிமேல் பணிகளிலும் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். வேலைகள் பெண்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும். இதற்காக, பணியிடங்களில் பாலின தணிக்கை நடத்தப்பட்டு, சம ஊதியம் உறுதி செய்யப்படும்.

உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அனைத்து, மாநில பல்கலைக்கழகங்களிலும் மாணவியருக்கு மாதவிடாய் விடுமுறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் கேரளா, நாட்டில் ஒரு முன்மாதிரி மாநிலமாக மாறியுள்ளது. 1997இல் நாட்டிலேயே முதல் மாநிலமாக பெண்களுக்கு தனியாக பாலின (ஜெண்டர்) பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதிக பெண்கள் உயர்கல்வி பயிலும் மாநிலத்தில் கேரள முதலிடத்தில் உள்ளது. இதேபோல், பெண்கள் அதிகம் பணிபுரியும் மாநிலங்கள் வரிசையிலும் முதலிடத்துக்கு வரவேண்டும்.

கேரளாவில், பாலின பட்ஜெட் இந்தாண்டு மொத்த பட்ஜெட்டில் 21.5 சதவீதமாக உள்ளது. 2017-18 முதல் ஆண்டுதோறும் பாலின பட்ஜெட் மாநில பட்ஜெட்டுடன் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. கேரளாவில் புதிதாக தொடங்கப்பட்ட புதிய தொழில் நிறுவனங்களில் 40 சதவீத தொழில்முனைவோர் பெண்களாவர். மேலும், புதிதாக துவங்கப்படும் தொழில் துறையில் ரூ.8,000 கோடி முதலீட்டில் ரூ.1,500 கோடி முதலீடு பெண் தொழில்முனைவோரிடமிருந்து பெறப்பட்டுள்ளது. சமூக முன்னேற்றமடைய பெண்களுக்கு நிதி சுதந்திரம் தேவை” என்று பேசினார்.

Read More : CBSE School | ”இனி தேர்வில் புத்தகத்தை பார்த்தே எழுதலாம்”..!! சிபிஎஸ்இ கொண்டுவரும் புதிய நடைமுறை..!!

Chella

Next Post

Corona தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகள்..!! இது உயிருக்கே ஆபத்தாம்..!! ஆய்வு முடிவில் அதிர்ச்சி..!!

Thu Feb 22 , 2024
கொரோனா வேக்சின் எடுத்துக் கொள்ளும் நோயாளிகளிடையே சில வகையான பக்க விளைவுகள் அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். ஒட்டுமொத்த உலகையும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டிப்படைத்த பாதிப்பு என்றால், அது கொரோனா தான். உலகின் பல்வேறு நாடுகளிலும் பொதுமக்கள் கொரோனாவால் கொத்து கொத்தாக உயிரிழந்தனர். பிறகு கொரோனா வேக்சின் உள்ளிட்ட பணிகளைத் தொடர்ந்தே கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் வந்தன. இப்போது அனைத்து நாடுகளிலும் கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டன. […]

You May Like