fbpx

கேரளா-தமிழ்நாடு ஒருவழித்தட சிறப்பு ரயில்!… தெற்கு ரயில்வே அறிவிப்பு!

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு ஒருவழித்தட சிறப்பு கட்டண ரயில் குறித்து தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், வார இறுதி விடுமுறையில் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் ரயில் எண் 06048 கொண்ட கொச்சுவேலி டூ தாம்பரம் இடையிலான ஒருவழித்தட சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அதன்படி, வரும் செப்டம்பர் 10ஆம் தேதி ஞாயிறு மாலை 5 மணிக்கு கொச்சுவேலியில் இருந்து சிறப்பு ரயில் புறப்படுகிறது. இது அடுத்த நாள் நண்பகல் 12 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ரயிலில் ஏசி 2 டயர் பெட்டி – 1, ஏசி 3 டயர் பெட்டிகள் – 7, ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகள் – 9 அடங்கும். ஜெனரல் செகண்ட் கிளாஸ் பெட்டிகள் – 2, செகண்ட் கிளாஸ் பெட்டிகள் (திவ்யாஞ்சியன் பிரண்ட்லி) – 2 என இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த சிறப்பு ரயில் எந்தெந்த ரயில் நிலையங்கள் வழியாக எந்தெந்த நேரங்களில் கடந்து செல்லும் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 10ஆம் தேதி மாலை 5 மணிக்கு கொச்சிவேலியில் ரயில் புறப்படுகிறது. இது 5.50 மணிக்கு கொல்லம் ரயில் நிலையத்தை வந்தடைகிறது. அங்கிருந்து 3 நிமிடங்கள் கழித்து புறப்பட்டு காயன்குளம் ரயில் நிலையத்தை 6.33 மணிக்கு வந்தடைகிறது. பின்னர் மாவெலிகராவை 6.44 மணிக்கு வந்தடைந்து, அங்கிருந்து 6.45 மணிக்கு புறப்படுகிறது. செங்கன்னூருக்கு 6.55 மணிக்கு வரும் ரயில், அங்கிருந்து புறப்பட்டு கோட்டயத்திற்கு 7.40 மணிக்கு வந்தடைகிறது. இதையடுத்து எர்ணாகுளம் டவுன் ரயில் நிலையத்தை 9.10 மணிக்கும், ஆலுவா ரயில் நிலையத்தை 9.38 மணிக்கும் சிறப்பு ரயில் வந்தடைகிறது.

இதன் தொடர்ச்சியாக திருச்சூருக்கு 10.37 மணிக்கும், பாலக்காட்டிற்கு நள்ளிரவு 12.02 மணிக்கும் வந்தடைகிறது. அங்கிருந்து புறப்பட்டு கோவை ரயில் நிலையத்தை 1.52 மணிக்கும், திருப்பூர் ரயில் நிலையத்தை 2.32 மணிக்கும் வந்தடைகிறது. பின்னர் ஈரோடு ரயில் நிலையத்தை 3.10 மணிக்கும், சேலம் ரயில் நிலையத்தை 4.12 மணிக்கும் வந்து சேருகிறது. இதையடுத்து ஜோலார்பேட்டைக்கு காலை 7.05 மணிக்கும், காட்பாடிக்கு 8.38 மணிக்கும் வந்தடைகிறது. அங்கிருந்து அரக்கோணம் ரயில் நிலையத்தை 9.33 மணிக்கும், பெரம்பூர் ரயில் நிலையத்தை 10.13 மணிக்கும் வந்து சேருகிறது. சென்னை எழும்பூரை 11.10 மணிக்கும், கடைசியாக தாம்பரம் ரயில் நிலையத்தை நண்பகல் 12 மணிக்கு வந்தடைகிறது.

Kokila

Next Post

அண்ணியுடன் எல்லை மீறிய உல்லாசம்….! தடையாக இருந்த அண்ணனை பிறந்தநாள் அன்று போட்டுத் தள்ளிய தம்பி அழுது நாடகமாடிய அண்ணி …!

Wed Sep 6 , 2023
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்துள்ள சித்தேரி கிராமத்தில் நேற்று முன்தினம், ஒரு கொலை நடந்தது. அந்த கொலை நேற்று காலை காவல்துறையினருக்கு தெரிய வந்தது. விசாரணை நடைபெற்றது அந்த கொலை பற்றி தற்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்துள்ள சித்தேரி கிராமம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ்(24) இவருடைய மனைவி யாமினி (20) இவர்கள் இருவரும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் […]

You May Like