இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி, இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் கடந்த 16 ஆம் தேதி துவங்கியது. முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 393 ரன்களை குவித்த இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்த நிலையில், ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் களமிறங்கியது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி சார்பில் துவக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா களமிறங்கினர். டேவிட் வார்னர் 9 ரன்களில் அவுட்டாக, அவருக்கு அடுத்து வந்த மார்னஸ் லாபுஷேன் டக் அவுட்டாகினார். ஆஸ்திரேலிய அணியில் விக்கெட்டுகள் சரிந்துக்கொண்டே செல்ல, மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கவாஜா மட்டும் நிலைத்து ஆடிக்கொண்டிருந்தார். இதனால், இங்கிலாந்து அணிக்கு நெருக்கடிக்கு அதிகரித்துக் கொண்டிருந்தது.
இந்நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பலமுறை ஃபீல்டிங்கை மாற்றியும் பலனிக்கவில்லை. பின்னர் கடைசியாக ஃபீல்டிங்கில், கவாஜாவை சுற்றியும் குடை வடிவில் நெருங்கிய தூரத்தில் ஃபீல்டர்களை நிறுத்திவைத்தார். அதற்கு பலன் கைமேல் கிடைத்தது. அதன்படி, இங்கிலாந்து வீரர் ராபின்சன் 3-வது நாளில், 113-வது ஓவரில் 4-வது பந்தை ஃபுல் லென்த்தில் வீசியபோது, அதனை கவாஜா தவறவிட்ட நிலையில், பந்து ஸ்டம்பில் பட்டு 141 ரன்களுக்கு அவுட்டானார்.
இந்த தொடரை வர்ணனை செய்துக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், “டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுபோன்ற ஒரு ஃபீல்டிங்கை இதற்கு முன்பு நான் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன். பேட்ஸ்மேனின் முகத்திற்கு முன்னால் ஃபீல்டர்களின் குடை மட்டுமே இருந்தது. கவாஜா கொஞ்சம் இறங்கி வந்து அடிக்க முயற்சிசெய்து, அதற்கான இடம் கொடுத்தார். கடைசியில் ஸ்டம்ப் அவுட்டாகினார். யார்க்கர் பந்துவீச்சு ஆஃப் ஸ்டம்பில் பட்டு கவாஜா வெளியேறியுள்ளார்.