fbpx

கோயில்களை தரிசிக்க வந்த சாமியார்களுக்கு அடி உதை..!! பிள்ளை பிடிக்க வந்ததாக நினைத்த கிராம மக்கள்..!

உத்தர பிரதேச மாநிலத்தில் மதுரா நகரை சேர்ந்த சாமியார்கள் நான்கு பேர் ஒவ்வொரு ஊராக சென்று அங்குள்ள கோவில்களை தரிசனம் செய்ய புனித பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் கர்நாடகாவின் பிஜாப்பூருக்கு சென்று சாமி தரிசனம் செய்து இருக்கின்றனர். அதன்பிறகு, சோலாப்பூரில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளனர்.

அவர்கள், மராட்டியத்தின் சங்கிலி மாவட்டத்திற்கு வந்தபோது, வழி தெரியாததால், அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்த சிறுவனிடம் வழி கேட்டுள்ளனர். ஆனால், அவர்கள் பிள்ளை பிடிக்க வந்தவர்கள் என தவறாக எண்ணிய கிராமவாசிகள் ஒன்றாக திரண்டு, சாமியார்களை அடித்து, உதைத்துள்ளனர்.

இதுகுறித்து வீடியோ வெளியானது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும், எங்களுக்கு எந்தவொரு புகாரும் வரவில்லை. ஆனால், உண்மை தன்மையை ஆய்வு செய்து வருகிறோம் என சங்கிலி மாவட்ட காவல் சூப்பிரெண்டு தீட்சித் கெடான் கூறியுள்ளார்.

Rupa

Next Post

வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு தடை இல்லை .... இயக்குனர் கவுதம் மேனன் - தயாரிப்பு நிறுவனத்துடன் சமரசம்

Wed Sep 14 , 2022
’’வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் தயாரிப்பு நிறுவனத்துடன் சமரசம் செய்து கொள்வதாக  கவுதம் வாசுதேவ் மேனன் தெரிவித்ததை அடுத்து நாளை படம் திட்டமிட்டபடி வெளியாக உள்ளது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் இசைப்புயல் ஏ.ஆர் . ரகுமான் இசையில் நாளை வெளியாக உள்ள படம் வெந்து தணிந்தது காடு… இத்திரைப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா ஆகியோர் நடித்துள்ளனர். தமிழகம் முழுவதும் […]

You May Like