fbpx

’அதிமுக அலுவலகத்தை உதைத்தது தொண்டர்களின் நெஞ்சில் உதைத்ததற்கு சமம்’..! ஓபிஎஸ்-ஐ கடுமையாக சாடிய ஈபிஎஸ்..!

’அதிமுகவுக்கும், தொண்டர்களுக்கும் துரோகம் செய்தவர் ஓபிஎஸ்’ என அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு சென்ற அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு அக்கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், பேருந்து நிலையம் முன்பு ஏராளமான அளவில் திரண்டிருந்த தொண்டர்களிடையே பேசிய எடப்பாடி பழனிசாமி, ”முதலமைச்சர் முக.ஸ்டாலின் அதிமுகவை பிளவுபடுத்தி வீழ்த்தி விடலாம் என கனவு காண்கிறார். அதிமுகவை வீழ்த்த முக.ஸ்டாலின் எத்தனை அவதாரங்கள் எடுத்தாலும் அத்தனையையும் மக்கள் துணைகொண்டு வீழ்த்துவோம்.

’அதிமுக அலுவலகத்தை உதைத்தது தொண்டர்களின் நெஞ்சில் உதைத்ததற்கு சமம்’..! ஓபிஎஸ்-ஐ கடுமையாக சாடிய ஈபிஎஸ்..!

திமுகவுடன் இணைந்து அதிமுகவின் இருபெரும்‌ தலைவர்களுக்கும், அதிமுகவுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் துரோகம் செய்தவர் ஓபிஎஸ். அதிமுகவினர் கோவிலாக எண்ணும் தலைமை அலுவலகத்தையும், ஜெயலலிதா இருந்த அறையையும் காலால் உதைத்து ஈவு இரக்கமின்றி அங்குள்ள பொருட்களை ஓபிஎஸ் தரப்பினர் சேதப்படுத்தியுள்ளனர். அதிமுக அலுவலகத்தை உதைத்தது ஒன்றரைக்கோடி அதிமுக தொண்டர்களின் நெஞ்சில் உதைப்பதற்கு சமம். ஓபிஎஸ் தரப்பினரால் அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்களையும்‌, பொருட்களையும்‌ மீட்டுத்தரமுடியாத அரசு திமுக அரசு. பலம் பொருந்திய அதிமுகவுக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன?.

’அதிமுக அலுவலகத்தை உதைத்தது தொண்டர்களின் நெஞ்சில் உதைத்ததற்கு சமம்’..! ஓபிஎஸ்-ஐ கடுமையாக சாடிய ஈபிஎஸ்..!

திமுக அரசு எப்போது போகும் என மக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். 60 அமாவாசைகளில் 14 அமாவாசைகள் சென்றுவிட்டன. மீதமுள்ள 46 அமாவாசைகள் முடியும் முன்பே வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும். மக்கள் வருமானமின்றி தவித்து வரும் நிலையில் வீட்டு வரி, மின்சார வரி, பால் விலை என அனைத்தையும் ஏற்றி வாக்களித்த மக்களுக்கு அருமையான அற்புதமான பரிசை முதலமைச்சர் முக.ஸ்டாலின் அளித்துள்ளார்”. இவ்வாறு அவர் பேசினார்.

Chella

Next Post

திருமணமான தம்பதிகள் ஆண்டுக்கு ரூ.72,000 ஓய்வூதியம் பெறலாம்.. அரசின் அசத்தல் திட்டம்..

Mon Aug 8 , 2022
நாட்டில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின் நிதி சுதந்திரத்திற்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல ஓய்வூதியத் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த வகையில், கடந்த 2019-ம் ஆண்டு பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் (PM-SYM- Pradhan Mantri Shram Yogi Maan-dhan) என்ற திட்டம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.. இந்த திட்டத்தில் திருமணமான தம்பதிகள் மாதத்திற்கு 200 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம் ஆண்டுக்கு […]

You May Like