தினந்தோறும் காலை, மாலை என 2 வேளைக்கு பலாப்பழ ஜூஸை, தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு குடித்து வந்தால் பாக்டீரியாவினால் உண்டாகும் சிறுநீரக குழாய் தொற்று நோய் குணமடைய உதவுகிறது.
முக்கனிகளில் ஒன்றான பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ள பலாப்பழத்தின் அனைத்துப் பாகங்களும் மனிதனுக்கு உதவுகிறது. பலாக்காயில் கறி சமைக்கலாம். பலாப்பழத்தை இனிப்பாகவும் சேர்த்துக் கொள்ளலாம். பலாக் கொட்டையில் கறி மற்றும் இதர சுவை மிகுந்த உணவுகளை சமைத்துப்சாப்பிடலாம். நன்கு பழுத்த பலாச் சுளைகள் மலச்சிக்கலை குணப்படுத்தும் அருமருந்தாக பயன்படுகிறது. பலாப்பழம் நமது மூளை மற்றும் உடல் ஆகிய இரண்டிற்கும் அதிக பலத்தைத் தரவல்லது. தொடர்ந்து பலாப்பழத்தை சாப்பிடுவதால் நரம்புகள் உறுதியாகும்; இரத்தத்தை விருத்தி செய்யும்.
கண்பார்வைக்கு உதவுகின்ற வைட்டமின் ஏ சத்து, பலாப்பழத்தில் அதிகமாக நிறைந்துள்ளது.உடல் கூட்டைத் தணிக்க உதவி புரியும் பலாப்பழத்தில், உயர் இரத்த அழுத்தத்தையும் குறைப்பதற்கு பெருமளவு உதவி செய்கிறது. உடல் எடை அதிகம் உள்ளவர்கள், எடையைக் குறைக்க விரும்பினால் பலாப்பழத்தை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். பலாபழத்தின் விதைகளில் புரோட்டின் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. மேலும், பலாபழத்தின் விதைகள் மண்ணை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவி செய்கிறது. இது காலநிலை மாற்றத்தால் பெரிதளவு பாதிக்கப்படுவதில்லை. வறட்சி மற்றும் அனைத்து பருவ நிலைகளிலும் இது தாக்குப் பிடிக்கும் தன்மை கொண்டது.
பலாப்பழத்தில் நார்ச்சத்துக்கள், வைட்டமின் ஏ, புரதச்சத்து, வைட்டமின் சி, ரிபோஃப்ளோவின், மெக்னீஷியம் மற்றும் பொட்டாசியம், தாமிரம் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்தப் பழத்தில் மிகவும் நன்மை அளிக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக காணப்படுகிறது. இருப்பினும், உடல் சூட்டை அதிகரிக்கும் என பலர் ஒதுக்கி விடுகிறார்கள். இந்தநிலையில் பலாப்பழத்திலும் ஜூஸ் செய்து குடித்தால், நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது. அந்தவகையில், தினந்தோறும் காலை, மாலை என 2 வேளைக்கு பலாப்பழ ஜூஸை, தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு குடித்து வந்தால் பாக்டீரியாவினால் உண்டாகும் சிறுநீரக குழாய் தொற்றுநோய் குணமடைய உதவுகிறது.