கவலை, பயம் மற்றும் மனச்சோர்வு என்பது குழந்தைகளுக்கும் உண்டு. அது தெரியாமலேயே பெற்றோர்களாகிய நாம் குழந்தைகளிடம் நடந்து கொள்வது உண்டு. நாம் குழந்தைகளுக்கு கற்பிக்கக் கூடிய முக்கியமான திறன்களில் ஒன்று கவலையை எப்படி கையாள்வது. கவலை அவர்களின் மன நலத்தை மட்டுமல்ல அவர்களின் உடல் நலத்தையும் பெரிய அளவில் பாதிக்கிறது. எனவே குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப அவர்கள் எந்த மாதிரியான விஷயங்களில் கவலைப்படுகிறார்கள் என்பதை பெற்றோர்களாகிய நாம் அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். உங்கள் பிள்ளைகளுக்கு கவலைகளை எப்படி சமாளிக்க வேண்டும் என்ற திறனை கற்றுக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் குழந்தை பருவத்திலேயே உணர்ச்சி ரீதியாகவும் மன ரீதியாகவும் அவர்களை தயார்படுத்த முடியும்.
கவலை மற்றும் பயத்தை கையாள உங்கள் குழந்தைக்கு எப்படி உதவுவது? முதலில் நம் குழந்தையின் தேவைகளை பகுத்துணர்வோடு புரிந்து கொள்ள வேண்டும். அதே மாதிரி பள்ளிப் பருவத்தில் இருந்தே குழந்தைகளின் வாழ்க்கைக்கு தேவையான திறன்களை கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தைகள் கவலைகள் என்று வரும் போது அவர்களுடன் மனம் திறந்து உரையாட வேண்டும். குழந்தைகள் எதுவும் பேசாமல் இருப்பதால் அவர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். அவர்களாக முன் வந்து அவர்களின் கவலைகளை எடுத்துக் கூற இடம் அளிக்க வேண்டும். அவர்களிடம் ஆழமான கேள்விகளைக் கேட்டு அவர்களின் பிரச்சினைகளை சரி செய்ய உறுதுணையாக இருக்க வேண்டும்.
சிறு வயதில் இருந்தே உணர்ச்சிகளை கையாள அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். நீங்கள் பேசுவதை விட குழந்தைகளிடம் அதிகமாக கேளுங்கள் குழந்தைகள் தினசரி பள்ளிக்குச் செல்கிறார்கள், பாடங்களை படிக்கிறார்கள். நிறைய பிரச்சினைகள் மற்றும் கவலைகளையும் அவர்கள் பார்ப்பது உண்டு. குழந்தை வளர்ப்பில் பேசுவதை விட குழந்தைகள் சொல்வதை கவனமாக கவனிப்பது மிகவும் அவசியம். இன்றைய கலாச்சாரத்தில் தொழில் நுட்பம் உங்கள் குழந்தையின் மன ஆரோக்கியத்தை பெருமளவில் பாதிக்கிறது. சமூக ஊடகங்களிலும் எதிர்மறையான தாக்கங்களை குழந்தைகள் சந்திக்கின்றன. இந்த எதிர்மறையான தாக்கங்கள் நீங்கள் குழந்தைகளை கண் காணிக்காத போது வெளிப்படுகின்றன. எனவே உங்கள் குழந்தைகள் மொபைல் போனில் இருக்கும் போதும் கவனமாக கண்காணிக்க வேண்டியது அவசியம்.
0-3 வயது குழந்தைகளின் கவலைகள் ஒரு பிறந்த குழந்தை அழுகிறது என்றால் அதற்கு உணவு, தூக்கம், டயப்பர் மாற்றம் போன்றவை காரணமாக இருக்கலாம். எனவே குழந்தையின் தேவையை அறிந்து நீங்கள் செயல்பட வேண்டும். முடிந்த வரை அவர்களை பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உணரச் செய்து ஆறுதல் அளிக்க வேண்டும். உங்கள் பிறந்த குழந்தைக்கு எதாவது பிடிக்கவில்லை என்றால் பிடித்த மாற்றத்தை செய்யலாம். இது அவர்களின் கவலைகளை குறைக்க உதவி செய்யும்.
3-5 வயது குழந்தைகளின் கவலைகள் மழலையர் பள்ளியில் இருக்கும் குழந்தைகள் முதன் முறையாக வெளி உலகத்திற்கு வருகிறார்கள். பயமுறுத்தும் விஷயங்களை இங்கே கற்றுக் கொள்கிறார்கள். இந்த வயதில் தான் அவர்களின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் அடையாளம் காணத் தொடங்குகிறார்கள். ஆனால் அந்த உணர்வுகளை எப்படி கையாள வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியாது. இந்த வயதில் அவர்கள் கண்களால் பார்ப்பதையும் காதுகளால் கேட்பதையும் கண்காணிக்க வேண்டும். அதற்கான கேள்விகளை கேட்டால் அவர்களுக்கு சரியான விளக்கங்களை நாம் கொடுத்தாக வேண்டும். இந்த வயதில் அவர்களை உணர்வுகளை வெளிப்படுத்த ஓவியங்களை செய்ய சொல்லலாம். வண்ணம் தீட்டுதல், நண்றியுணர்வை ஊக்குவித்தல், படைப்பாற்றலை தூண்டுதல் போன்ற விஷயங்களை செய்யலாம்.
6-11 வயது குழந்தைகளின் கவலைகள் இந்த வயதில் குழந்தைகள் பள்ளிகளில் சில கவலைகளை எதிர்கொள்ள நேரிடலாம். இந்த வயதில் அவர்களின் ஹார்மோன்கள் மாறுகின்றன. அவர்களின் மூளையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்த உலகம் மன்னிக்கவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். இது அவர்களுக்கு கவலையான எண்ணங்களை ஏற்படுத்தும். அவமரியாதை அவர்களுக்கு மிகப் பெரிய கஷ்டத்தை உண்டாக்குகிறது. எனவே இந்த வயதில் குழந்தைகளிடம் மரியாதையாக நடந்து கொள்வது அவசியம். மற்றவர்களும் உங்களை மதிக்கிறார்கள் என்பதை காட்ட வேண்டும். அதே நேரத்தில் அவர்களுக்கும் மரியாதையை கற்பிப்பது அவசியம். உங்கள் குழந்தை தோல்வியை சந்தித்தால் உறுதுணையாக இருங்கள். அவர்கள் கவலையாக இருக்கும் போது அவர்களது மனதை நேர்மறையான வழியில் செலுத்துங்கள். குழந்தைகளுக்கு கடின உழைப்பை சொல்லிக் கொடுங்கள். இது அவர்களின் சிரமங்களையும், பதட்ட உணர்வுகளையும் சமாளிக்க உதவுகிறது. உங்கள் குழந்தைக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுங்கள்.
12-19 வயது குழந்தைக்கு ஏற்படும் கவலைகள் குழந்தையின் இளம் பருவம் மிகவும் சிக்கலானது. இளமைப் பருவத்தில் அவர்கள் நிறைய அழுத்தங்களை சந்திக்கிறார்கள். பள்ளியில் உள்ள நண்பர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்ப்பார்ப்பு போன்ற விஷயங்களால் டீன்ஏஜ் பருவத்தினர் அதிக கவலைகளை சந்திக்கின்றனர். டீன் ஏஜ் வயதில் எல்லா விஷயத்திலும் குழந்தைகள் சரியானவர்களாக இருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பை நிறுத்துங்கள். முதலில் அவர்கள் உங்களிடம் பாதுகாப்பாக உணர வேண்டும். அவர்களின் வரம்புகளை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
தோல்வியை எதிர் கொள்ளாமல் இருக்க அவர்களை ஊக்குவியுங்கள். அவர்களைப் பற்றி எப்படியெல்லாம் பெருமைப்படுகிறீர்கள் என்பதை டீன்ஏஜ் குழந்தைகள் கேட்க விரும்புகின்றனர். எனவே அவர்கள் செய்யும் நல்ல விஷயத்திற்கு அவர்களை பாராட்டுங்கள். அவர்கள் விரும்பினால் உங்கள் உதவி மற்றும் ஆலோசனைகளை நீங்கள் வழங்கலாம். ஆனால் கட்டாயப்படுத்த வேண்டாம். குழந்தை வளர்ப்பு என்பது குழந்தைகளை கட்டுப்படுத்துவதோ அல்லது தள்ளுவதற்கு பதிலாக நம் குழந்தைகளை பகுத்தறிவாளர்களாக மாற்றும் போது அவர்கள் அதை எளிதில் புரிந்து கொண்டு செயல்படுவார்கள்.