fbpx

சச்சின் டெண்டுல்கரை விட வேகமாக 14,000 ரன்களை கடந்த “கிங் கோலி”…! ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த 2வது வீரர்..!

பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் 14,000 ரன்களை கடந்தார். தனது 299வது ஆட்டத்தில் இந்த மைல்கல்லை அடைந்த விராட் கோலி, சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இந்தியாவுக்காக அதிக ஒருநாள் ரன்கள் எடுத்த இரண்டாவது வீரராக உருவெடுத்துள்ளார்.

இன்று நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய நை அபாக்கிஸ்தான் அணியயை எதிர்கொண்டு வருகிறது இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 241 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக சவுத் ஷகீல் மட்டுமே 62 ரன்கள் எடுத்தார்.

இந்தியா தரப்பில் அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளையும், நிதிஷ் ராணா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோர் தல 1 விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். 242 என்ற இலக்குடன் தற்போது இந்திய அணி ஆடி வருகிறது.

இந்த போட்டி விராட் கோலியின் 299வது ஒருநாள் போட்டி ஆகும். இதற்கு முன்னதாக 298 இன்னிங்ஸ் விளையாடிய கோலி 13,985 ரன்கள் எடுத்திருந்தார். 14,000 ரன்களை எடுக்க 15 ரன்கள் தேவைப்படும் நிலையில், இன்றைய போட்டியில் விளையாடிய விராட் கோலி, ஹாரிஸ் ரவூஃப் வீசிய 13வது ஓவரில், ஒருநாள் கிரிக்கெட்டில் 14,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

36 வயதான விராட் கோலி தனது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 50 சதங்களையும் 73 அரைசதங்களையும் அடித்துள்ளார். இந்த 14,000 ரன்களை, முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை விட வேகமாக எட்டியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 350 இன்னிங்சில் 14,000 ரன்களை கடந்துள்ளார்.

கோலி 8000 ODI ரன்கள் (175 இன்னிங்ஸ்), 9000 ரன்கள் (194 இன்னிங்ஸ்), 10,000 ரன்கள் (205 இன்னிங்ஸ்), 11,000 ரன்கள் (222 இன்னிங்ஸ்), 12,000 ரன்கள் (242 இன்னிங்ஸ்), 13,000 ரன்கள் (267 இன்னிங்ஸ்) மற்றும் இப்போது 14,000 ரன்களை 299வது ஒரு நாள் போட்டியில் விரைவாக கடந்துள்ளார்.

இந்தப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் ஒட்டுமொத்தமாக ஒருநாள் கிரிக்கெட்டில் 18,426 ரன்கள் எடுத்த வீரராக உள்ளார். இரண்டாம் இடத்தில் இலங்கையின் முன்னாள் வீரர் குமார் சங்கக்காரா உள்ளார், அவர் தனது 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் 14,234 ரன்கள் எடுத்துள்ளார். இந்த பட்டியலில் மூன்றாவதாக தற்போது விராட் கோலி இணைந்துள்ளார்.

English Summary

“King Kohli” crosses 14,000 runs faster than Sachin Tendulkar…! Second highest run scorer in ODIs..!

Kathir

Next Post

உங்களை பாடாய் படுத்தும் மூட்டு வலிக்கு, இதை விட சிறந்த மருந்து இருக்கவே முடியாது... கட்டாயம் இதை ஒரு முறை குடித்துப் பாருங்க..

Mon Feb 24 , 2025
best treatment for knee pain

You May Like