fbpx

Kishore | ’நன்றி கெட்டவர்கள்’..!! ’மோடி அரசுக்கு இனி உணவு கொடுக்காதீர்கள்’..!! விவசாயிகளுக்கு நடிகர் கிஷோர் வேண்டுகோள்..!!

பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்களைத் தடுக்கும் விதமாக போலீசார், அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடியும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ஆடுகளம், பொல்லாதவன் படங்களில் நடித்த கிஷோர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருந்த பதிவில், “விவசாயிகள் போராட்டத்தைத் தடுக்க சாலைகள் தோண்டப்பட்டன. சுவர்கள் எழுப்பப்பட்டன. குழிகள் வெட்டப்பட்டன. துப்பாக்கி குண்டுகள் புறப்பட்டன. கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. ஒவ்வொரு நாளும் தனது வார்த்தையை மாற்றிக்கொள்ளும் மோடியின் அரசாங்கம் இவை அனைத்தையும் செய்தது. விவசாயிகள் இனியாவது தங்களுக்கு எதிராக பொய்யான வதந்திகளைப் பரப்பும் மோடிக்கும், அவரது அரசுக்கும், அவர்களது பக்தர்களுக்கும் உணவு கொடுப்பதை நிறுத்த வேண்டும்.

இந்த நன்றி கெட்டவர்களுக்கு மட்டுமல்ல, தங்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியவர்களுக்கும் தொடர்ந்து உணவளிக்கிறார்கள் இவர்கள். இத்தனை கருணையுள்ள இவர்கள் தேசவிரோதிகளா?” என்று விவசாயிகளுக்கு ஆதரவாகப் பதிவிட்டுள்ளார்.

Read More : #BREAKING | நாம் தமிழர் கட்சி சீமானின் மனைவிக்கு புதிய பொறுப்பு..!! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Chella

Next Post

NTK| மனைவி கயல்விழிக்கு முக்கிய பொறுப்பு.! சீமான் அறிவிப்பு.!

Thu Feb 22 , 2024
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற மார்ச் மாதம் இரண்டாம் வாரத்திற்கு பிறகு வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் (NTK) பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு இப்போது இருந்தே தயாராக தொடங்கி விட்டது செந்தமிழன் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி(NTK) எப்போதும் போல இந்த தேர்தலிலும் தனித்துப் போட்டியிடுகிறது. மேலும் […]

You May Like