fbpx

‘உதட்டில் முத்தம் கொடுத்தால் ஆபத்து’ – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

முத்தத்தால் கூட நோய் வருமா என்கிற அதிர்ச்சி தகவலை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். ஆம், மோனோநியூக்ளியோசிஸ் (மோனோ) என்று அழைக்கப்படும் “முத்த நோய்” (kiss disease) ஒரு வகையான வைரஸ் தொற்றினால் பரவ கூடிய நோயாகும். இது பெரும்பாலும் இளம் வயது கொண்டவர்களிடம் பரவ கூடிய நோயாக உள்ளது. இதற்கு காரணம் இளம் வயதினர் அதிக அளவில் முத்தம் கொடுத்து கொள்வது தான்.

இந்த தொற்றை ஏற்படுத்த கூடிய வைரஸ் பெயர் எப்ஸ்டீன்-பார் வைரஸ் என்பதாகும். இதை EBV என்றும் கூறுவார்கள். இந்த வைரஸ் சுமார் 95% மக்களை பாதிக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், இந்த தொற்றினாலும் இளம் வயதினர் மட்டுமல்லாமல் சிறுவயது குழந்தைகளும் கூட பாதிக்கப்படுகின்றனர்.

18-ம் நூற்றாண்டின் இறுதி வரை Kissing Disease என்ற ஒரு தொற்றுநோய் கண்டறியப்படவில்லை. 1920ம் ஆண்டுக்குப் பிறகே முத்தத்தினால் புதுவித தொற்றுநோய் உண்டாகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்தார்கள். கடந்த 50 ஆண்டுகளில் இயல்பான தொற்றாக மாறிவிட்ட Kissing Disease, தற்போது 35 வயதுக்குட்பட்ட அமெரிக்கர்களில் 90 சதவிகிதம் பேரை பாதித்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்த தொற்று வாயில் சுரக்க கூடிய உமிழ்நீர் மூலம் பரவுகிறது. எனவே, வாயினால் முத்தம் கொடுக்கும் போது இந்த தொற்று எளிதாக பரவும். இது முத்தத்தால் பரவுவது மட்டுமல்லாமல், பாலியல் செயல்பாடுகள் மூலமாகவும் பரவ கூடும். அத்துடன், ஒருவர் பயன்படுத்திய வாட்டர் பாட்டில், பானங்கள் போன்றவற்றை குடிப்பதன் மூலமாகவும் பரவுகிறது.

அறிகுறிகள்

EBV தொற்றினால் கல்லீரல் அல்லது மண்ணீரலில் சுருக்கம் உண்டாகலாம். சமயங்களில் மண்ணீரலில் காயங்களும் உண்டாகலாம். மஞ்சள் காமாலையையும் EBV உண்டாக்கும் சாத்தியம் உண்டு. த்தப்பரிசோதனை செய்யும்போது அதில் பிரத்யேகமான ஆன்டிபாடிகள் அடங்கியிருப்பதை வைத்து EBV தொற்றினை உறுதி செய்யலாம்.

தலைவலி, அதிக உடல்சோர்வு, தொண்டையில் புண் அல்லது வலி, கழுத்துப்பகுதியில் உள்ள நிணநீர் முடிச்சுகள் பெரிதாவது, உடலில் ஆங்காங்கே சிவந்து போவது (Rashes) போன்றவை முக்கிய அறிகுறிகளாக உள்ளன. வைரஸ் தொற்று ஏற்பட்டவர் குணமடைய 2 முதல் 4 வாரங்கள் வரை தேவைப்படும். குணமான பின்பும் அடுத்த சில மாதங்களுக்கு அந்த அசௌகர்யம் உடலில் இருக்கலாம்.

யாருக்கு ரிஸ்க்?

உலகின் பெரும்பாலான நாடுகள் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் நாகரிக கலாசாரத்தை விரும்பிப் பின்பற்றி வருகின்றன. எனவே, இந்த மோனோநியூக்ளியோசிஸ் இனி மேற்கத்திய கலாசாரக் காதலர்களிடம் அதிகரிக்கலாம். குறிப்பாக, வயது வந்தவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

சிகிச்சைகள் விவரம்

மோனோநியூக்ளியஸ் தொற்று வராமல் தவிர்க்க தடுப்பூசிகள் எதுவும் இதுவரை இல்லை. இதற்கான ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. வரும் முன்னர் தடுப்பதே சிறப்பான சிகிச்சை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். EBV தொற்றுக்கு வழக்கமான காய்ச்சலுக்கான சிகிச்சைகள், வலிநிவாரணிகள், போதுமான ஓய்வு, திரவ உணவுகளைப் போதுமான அளவு எடுத்துக் கொள்வது என்று நோயாளியின் உடல்நிலைகேற்ப சிகிச்சைகள் வழங்கப்படும்.

தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

ஒருவேளை உங்களுக்கு முத்த நோய் வந்திருந்தால், அதில் இருந்து விடுபட அதிக அளவில் நீர்ச்சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்ளலாம். மேலும், பழச்சாறுகள், காபி மற்றும் சோடா போன்றவற்றை எடுத்து கொள்வதற்கு பதிலாக தண்ணீரை குடித்து வரலாம். அதே போன்று, அதிக நேரம் ஓய்வெடுப்பதும் இந்த முத்த நோயில் இருந்து விடுபடுவதற்கான வழியாகும். முக்கியமாக இரவு நேரத்தில் அதிக தூக்கம் பெறவதும் நல்லது. இவை அனைத்திற்கும் மேலாக, முத்த நோயின் அறிகுறி இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது

English Summary

“Kiss disease” is a type of viral infection. It is a disease that mostly affects young people. The reason for this is that young people kiss a lot.

Next Post

வேங்கைவயல்..!! அசுத்தம் செய்த விவகாரத்தில் அறிக்கைகளை மட்டுமே பெற்றுக் கொண்டிருக்க முடியாது..!! ஐகோர்ட் சரமாரி கேள்வி..!!

Mon Jul 8 , 2024
Why not even a single criminal has been arrested in the Vengai field case even after 2 years..? Madras High Court has questioned.

You May Like