fbpx

“ என் அப்பா வயதில் இருந்த இயக்குனர் தப்பா நடந்துகிட்டாரு..” கிழக்கு சீமையிலே நடிகை ஓபன் டாக்..

சினிமாவில் நடிகைகளுக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் என்பது காலங்காலமாக தொடரும் விஷயம் தான். பல நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் மற்றும் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகை அஸ்வினி நம்பியார் தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்து பேசி உள்ளார்.

பிரபல யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர் “ எனக்கு நடந்த இந்த சம்பவம் குறித்து இத்தனை ஆண்டுகள் நான் பேசவில்லை. நான் அப்போது டீனேஜில் இருந்தேன். அவர் மலையாள சினிமாவில் ஒரு பெரிய இயக்குனர். அவருடன் ஏற்கனவே ஒரு படம் குறித்து விவாதிப்பதற்காக என்னை அவரின் அலுவலகத்திற்கு வர சொல்லி இருந்தனர். எப்போதும் நான் ஷூட்டிங் செல்லும் போது என் அம்மா கூட இருப்பார். ஆனால் அன்றைய தினம் என் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை என்பதால் அவரால் வரமுடியவில்லை. அப்போது சிகை அலங்காரம் செய்யும் ஒரு பெண்ணுடன் நான் அவர் அலுவலகத்திற்கு சென்றேன்.

அந்த இயக்குனர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். என்ன நடந்தது என்பதை புரிந்து கொள்ளவே எனக்கு நேரம் ஆனது. நான் தப்பு பண்ணிட்டேனா. அவர் பண்ண தவறா. நான் இடம் கொடுத்துவிட்டேனா என்று தெரியவில்லை. வீட்டுக்கு போன ஏன் ஒரு மாதிரி இருக்கிறார்ய் என்று என் அம்மா கேட்டார். ஆனால் அவரிடம் எப்படி இதை சொல்வது என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். அப்போது வேறு வழியில்லை என்பதால் அவரிடம் கூறிவிட்டேன்.

அவர்களால் அதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. என் அம்மா அழுது புலம்பினார், ஒரு கட்டத்தில் இது உன் தவறு கிடையாது. அது அவரின் தவறு. அவர் என் அப்பா வயதில் இருந்தவர்.. அது எனக்கு மிகப்பெரிய படிப்பினை. அந்த சம்பவம் என்னை மிகவும் தைரியமாக்கியது. அதன் பின்னரே என் அம்மா இல்லாமல் எது நடந்தாலும் தனியாக சமாளிப்பேன் என்ற உறுதி எனக்கு வந்தது.” என்று கூறினார்.

மேலும் தான் நடித்த படங்களில் 70% படங்களுக்கு முழுமையான சம்பளம் கிடைத்தில்லை என்றும் கூறினார்.

1991-ம் ஆண்டு வெளியான பாரதிராஜாவின் புதுநெல்லு புது நாத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் மலையாளத்தில் பல ஹிட் படங்களில் அவர் நடித்தார். மீண்டும் பாரதி ராஜா இயக்கிய கிழக்கு சீமையிலே படத்தில் அஸ்வினி நடித்திருப்பார். குறிப்பாக அஸ்வினி – விக்னேஷ் நடிப்பில் உருவான ஆத்தங்கர மரமே பாடல் இன்றளவும் பலரின் ஃபேவரைட் பாடலாக உள்ளது.

அதன்பின்னர் தமிழ், மலையாள படங்களில் பிசியாக நடித்த அஸ்வினி திருமணத்திற்கு பின் சிங்கப்பூரில் செட்டிலாகிவிட்டார். அவர் சிங்கப்பூரிலும் சீரியல் மற்றும் குறும்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், கௌரி கிஷன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி உள்ள சுழல் 2 வெப் சீரிஸில் அவர் நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸ் நாளை அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Rupa

Next Post

இட்லி தயாரிப்பில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை..! ஹோட்டலில் அதிரடி ரெய்டு..!! - அரசு அதிரடி

Thu Feb 27 , 2025
Karnataka bans plastic use in idli making after hotels found using cancer element for preparation

You May Like