fbpx

கே.எல்.ராகுல்-அதியா ஷெட்டிக்கு கோடிகளில் குவிந்த பரிசுப் பொருட்கள்..!! கோலி, தோனி என்ன செய்தார்கள் தெரியுமா..?

கே.எல்.ராகுல் – அதியா ஷெட்டி தம்பதியினருக்கு பிரபலங்கள் பலரும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான கே.எல். ராகுலுக்கு, அவருடைய காதலியும் பாலிவுட் நடிகையுமான அதியா ஷெட்டியுடன் திருமணம் நடைபெற்றது. கடந்த ஜனவரி 23ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் உள்ள பண்ணை வீட்டில் இந்த திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் கே.எல். ராகுல் மற்றும் அதியா செட்டியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருக்கமான நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

கே.எல்.ராகுல்-அதியா ஷெட்டிக்கு கோடிகளில் குவிந்த பரிசுப் பொருட்கள்..!! கோலி, தோனி என்ன செய்தார்கள் தெரியுமா..?

இந்நிலையில், திருமண தம்பதியினருக்கு பாலிவுட் வட்டாரங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலரும் கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளனர். கே.எல். ராகுலின் நெருங்கிய சகாவான விராட் கோலி திருமண நிகழ்ச்சியில் நேரில் பங்கேற்க முடியாவிட்டாலும் புதுமணத் தம்பதிக்கு ரூ.2.17 மதிப்பிலான பிஎம்டபிள்யூ சொகுசு காரை பரிசாக வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதேபோன்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் கேப்டனுமான தோனி கே.எல் ராகுலுக்கு 80 லட்சம் ரூபாய் மதிப்பில் கவாஸாகி நிஞ்சா பைக்கை பரிசாக வழங்கியிருக்கிறார் என தெரிகிறது.

அதேபோல சுனில் ஷெட்டி தன் மருமகனுக்கு ரூ.50 கோடி மதிப்பிலான வீட்டை அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறார். இந்த வீடு மும்பையில் இருக்கிறது. இது தவிர சுனில் ஷெட்டியின் நெருங்கிய நண்பரான நடிகர் சல்மான் கான் மணப்பெண்ணுக்கு ரூ.1.64 கோடி மதிப்பிலான ஆடி காரை பரிசாக வழங்கியிருக்கிறார். நடிகர் ஜாக்கி ஷெராஃப் மணப்பெண்ணுக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான சோபார்ட் வாட்சை பரிசளித்திருக்கிறார். நடிகர் அர்ஜூன் கபூர் ரூ.1.5 கோடி மதிப்பிலான வைர பிரேஸ்லெட் ஒன்றை அதியாவுக்கு பரிசாகக் கொடுத்திருக்கிறார். வரும் பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட ஒப்புக்கொண்டுள்ளதால் ராகுல் உடனடியாக மைதானத்துக்குள் வரவேண்டியிருக்கும் என சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, பல கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்களை பெற்றுவரும் கே.எல்.ராகுல் இதற்கெல்லாம் வரி செலுத்த வேண்டுமா என்று பலரும் ட்விட்டரில் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து வருமான வரித்துறை தரப்பு கூறுகையில், ”ஒருவர் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ள ஒரு பொருளை அன்பளிப்பாக பெற்றுக்கொள்ளும்போது அதற்­கு வரி செலுத்த வேண்டும். ஆனால் அது திருமண விழாக்களுக்கு பொருந்தாது. திருமண விழாவில் பெறப்படும் பரிசுப்பொருட்களுக்கு வரி செலுத்த தேவையில்லை. அதேநேரம், பிறந்தநாள், ஆண்டுவிழா மாதிரியான விழாக்களின் போது பெறப்படும் பரிசுகளுக்கு இந்த வரிவிலக்கு கிடையாது” என்றுள்ளனர்.

Chella

Next Post

NEET UG 2023 நுழைவுத் தேர்வு..!! அடுத்த வாரம் முதல்..!! விண்ணப்பப் பதிவு தொடக்கம்..!! வெளியான முக்கிய தகவல்..!!

Thu Jan 26 , 2023
தேசிய தேர்வு முகமை (NTA) அடுத்த வாரம் NEET UG 2023 தேர்வுக்கான விண்ணப்பப் பதிவைத் தொடங்க வாய்ப்புள்ளது. தேசிய தேர்வு முகமை அறிவிப்பின்படி, NEET UG நுழைவுத் தேர்வு மே 7, 2023 அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் பதிவு செயல்முறை தொடங்கிய பிறகு, NEET UG 2023 ஆர்வலர்கள் தங்கள் விண்ணப்பங்களை neet.nta.nic.in இல் சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள். NEET UG 2023 தேர்வு எழுத விரும்புவோர், […]
NEET UG 2023 நுழைவுத் தேர்வு..!! அடுத்த வாரம் முதல்..!! விண்ணப்பப் பதிவு தொடக்கம்..!! வெளியான முக்கிய தகவல்..!!

You May Like