fbpx

இனி கை வலிக்க சப்பாத்தி மாவு பிசைய வேண்டாம்; மிக்ஸியிலேயே மாவை பிசைந்து, சாஃப்ட் சப்பாத்தி செய்யலாம்…

சப்பாத்தி ஆரோக்கியமான ஒரு உணவு தான். ஆனாலும் பல வீடுகளில் சப்பாத்தி செய்வதில்லை. ஏனென்றால் பல மணி நேரம் கை வலிக்க மாவு பிசியே வேண்டும் என்பது தான். அப்படி உங்களுக்கும் சப்பாத்திக்கு மாவு பிசைந்து கை வலிக்குதா? இனி கவலையே வேண்டாம், எத்தனை பேராக இருந்தாலும் மாவை மிக்ஸியிலேயே பிசைந்து சாஃப்ட் சப்பாத்தி செய்யலாம். ஆம், உண்மை தான் இதை எப்படி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…

இதற்க்கு முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் தேவையான அளவு கோதுமை மாவு, எண்ணெய், உப்பு, சர்க்கரை, தண்ணீர் ஆகியவை சேர்த்து, நன்கு அரைத்து விடுங்கள். பின்னர் வழக்கம் போல் ஒரு பாத்திரத்தில் மாற்றி சிறிது நேரம் மூடி வைத்து விடுங்கள். பின்னர் எப்போதும் போல சப்பாத்திக்கு மாவு தேய்த்து கல்லில் போட்டு எடுத்தால் சாஃப்டான சப்பாத்தி கிடைக்கும். இந்த முறையை நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பாருங்க. நம் விரல்கள் செய்யும் வேலையை மிக்ஸி செய்கிறது.

இதை தவிர இதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த மாவில் நீங்கள் பூரி கூட செய்யலாம். ஆனால் இந்த முறையில் நீங்கள் செய்யும் போது, அனைத்து பொருட்களும் சரியான அளவில் போட வேண்டும் இல்லையென்றால் மாவு சரியான பதத்தில் வராது. அதனால் அளவுகளை எடுக்கும் போது மட்டும் சற்று கவனமாக எடுத்துக்கொளுங்கள்.

Read more: எச்சரிக்கை.. செயற்கை இனிப்புகள் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வருமாம்..!! – மருத்துவர்கள் எச்சரிக்கை

English Summary

knead-chapathi-flour-in-mixie-by-these-simple-tips

Next Post

எப்போதுமே சோர்வாக இருக்கீங்களா..? உணவுக்கு பிறகு இதை மட்டும் சாப்பிட்டு வந்தால் சூப்பர் ரிசல்ட் கிடைக்கும்..!!

Wed Dec 4 , 2024
Learn and benefit from some tips in this collection that will help you overcome fatigue and gain strength in your body.

You May Like