fbpx

தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருந்தால் போதும்..!! மாதம் ரூ.58,000 வரை சம்பளம்..!! தமிழ்நாடு அரசின் சூப்பர் வேலை..!!

தமிழ்நாடு பொருளியல் மற்றும் புள்ளியில் துறையில் காலியாக உள்ள நிரந்தர முழுக் காவலர், தூய்மைப் பணியாளர், அலுவலக உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் டிசம்பர் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விவரங்கள் :

பதவியின் பெயர்

நிரந்தர முழுக் காவலர்

தூய்மைப் பணியாளர்

அலுவலக உதவியாளர்

காலிப்பணியிடங்கள் : 9

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18, அதிகபட்சமாக பட்டியல் பழங்குடியினர் 37, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ சீர்மரபினர் 32, பொது பிரிவினர் 32

கல்வித் தகுதி :

8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்)

சம்பளம் :

நிரந்தர முழுக் காவலர் – ரூ. 15,700 – ரூ.58,100 (Level – 1)
தூய்மைப் பணியாளர் – ரூ. 15,700 – ரூ.58,100 (Level – 1)
அலுவலக உதவியாளர் – ரூ. 15,700 – ரூ.58,100 (Level – 1)

விண்ணப்பிக்கும் முறை :

* des.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, அண்மையில் எடுக்கப்பட்ட Passport Size Colour புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.

* ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்கும் போது, ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை விண்ணப்பத்தில் தெளிவாக குறிப்பிடவும் வேண்டும்.

* ஆதார் கார்டு, இருப்பிட முகவரி, வயது, கல்வித் தகுதி மற்றும் சாதிச் சான்று குறித்த சான்றுகளின் நகலை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். நேர்முகத் தேர்வின் போது மேற்கண்ட சான்றுகளின் அசல் ஆவணங்களை தவறாமல் சமர்ப்பிக்கவும் வேண்டும்.

* விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.

* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி : இயக்குநர், பொருள் இயல் மற்றும் புள்ளியியல் துறை, டி.எம்.எஸ்.வளாகம் தேனாம்பேட்டை , சென்னை – 600006.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 5, 2023 மாலை 5.45 மணிக்குள். அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள், முழுமையான விவரங்களுடன் பெறப்படாத விண்ணப்பங்கள், உரிய சான்றிதழ்கள் இல்லாமல் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கு, விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள முகவரிக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் நாள் குறித்த விவரம் தபால் மூலமாக பின்னர் தெரிவிக்கப்படும்.

Chella

Next Post

விவசாயிகளே நாளை தான் கடைசி..!! உடனே விண்ணப்பித்தால் பயிர் காப்பீடு கிடைக்கும்..!!

Tue Nov 21 , 2023
விவசாயிகள் பருவமழை மற்றும் அதிகமான வெயில் உள்ளிட்ட காலநிலை மாற்றங்களால் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நஷ்டத்துக்கு பரிகாரம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதாவது மத்திய அரசு சார்பில் பயிர் காப்பீடு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிர் காப்பீடு என்பது மத்திய வேளாண் துறை அமைச்சகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சம்பா, தாளடி பயிர்களுக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15ஆம் தேதி வரை […]

You May Like