முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா மற்றும் எஸ்டேட் உள்ளது. இங்கு, கடந்த 2017ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது. இதுதொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியில் உள்ளனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கொடநாடு எஸ்டேட்டின் மேலாளர் நடராஜன் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி அவர், நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் போலீசார், சசிகலா கொடநாடு எஸ்டேட் வந்தபோது பங்களாவில் உள்ள அறைகளை பார்த்து விட்டு ஏதாவது கேட்டாரா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் தான், முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். வரும் 11ஆம் தேதி கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Read More : ’தமிழிசை என பெயர் வைத்ததற்காக அவரது தந்தையே வருத்தப்பட்டிருப்பார்’..!! அட்டாக் செய்த அமைச்சர் சேகர்பாபு..!!