fbpx

பேட்டிங்கில் அறிவுரை தேவைப்பட்டால் கோலியிடம் தான் கேட்பேன்!… பாக்., வீரர் புகழாரம்!

தனக்கு பேட்டிங்கில் அறிவுரை தேவைப்பட்டால், கோலி எப்போதும் தனக்கு உதவியாக இருந்துள்ளதாக பாகிஸ்தான் வீரர் புகழ்ந்துள்ளார்.

ரன் மெஷின் என்றழைக்கப்படும் இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலி தனது பேட்டிங் திறமை மற்றும்தனது விளையாட்டில் அவரது அர்ப்பணிப்பு மூலம் ஜொலித்து வருகிறார். உலகம் முழுவதும் இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றன, அதிலும் குறிப்பாக கிரிக்கெட் வீரர்கள் கூட இவருக்கு ரசிகர்கள் என்று கூறினாலும் அது மிகையாகாது. இந்த நிலையில் விராட் கோலியின் ரசிகரான, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அகமது ஷெஷாத், தன்னை விராட் கோலியுடன் ஒப்பிடுவது குறித்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறும் போது எனக்கு விராட் கோலி மீது மிகப்பெரிய மரியாதை உள்ளது அதிலும் இந்தியாவின் டெஸ்ட் அணியை சிறப்பாக வழி நடத்தியதும் மிகவும் பாராட்டுதலுக்குரியது. நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம்.

அதிலும் கிரிக்கெட் வீரராக அவர் மீது எனக்கு மிகுந்த மதிப்பு உள்ளது. அவர் கிரிக்கெட்டுக்காக தன்னை செதுக்கியுள்ளார் என்றே கூறலாம், அந்த அளவிற்கு அவரது பேட்டிங்கில் அவர் தன்னை வடிவமைத்துக் கொண்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றவர். நான் இதுவரை பார்த்ததில் எந்த வீரரும் இந்த அளவிற்கு தன்னை உருவாக்கியதில்லை. அதாவது அவர் சில மாதங்களுக்கு முன்பாக வரை பேட்டிங்கில் பார்மின்றி தவித்து வந்தார், மேலும் சதம் அடிக்க முடியாமலும் திணறி வந்தார். ஆனால் சமீப காலங்களில் அவர் பேட்டிங் திறன் மீண்டும் பழைய பார்முக்கு திரும்பி உள்ளது.

ஐபிஎல் தொடர் உட்பட அடுத்தடுத்து சதம் அரைசதம் என ரன்களை குவித்து வருகிறார். நாங்கள் இருவரும் அவ்வப்போது பேசிக் கொள்வோம். அவர் எனக்கு மிகவும் உதவியாக இருந்துள்ளார். எனக்கு பேட்டிங்கில் எப்பொழுது அறிவுரை தேவைப்பட்டாலும் நான் அவருக்கு போன் செய்து பேசும்போது அவர் எனக்கு பேட்டிங்கை மேம்படுத்த உதவியுள்ளார். அவர் இன்னும் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று நான் கூறுவேன் அவரிடமிருந்து இன்னும் சிறந்த ஆட்டங்கள் பல வெளிவரும் என்று எதிர்பார்க்கிறேன் என அகமது ஷெஷாத் கூறியுள்ளார்.

Kokila

Next Post

மக்களே கவனம்!... வாட்ஸ்அப், எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும் லிங்க்-களை திறக்கும்போது!... ட்விட்டரில் எச்சரிக்கை பதிவு!

Sat Jun 24 , 2023
வாட்ஸ்அப் அல்லது எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும் லிங்க் களை திறக்கும் போது கவனமுடன் இருக்க அரசு எச்சரித்துள்ளது. தற்போது பல்வேறு இணையதள மோசடிகள் நடைபெற்று வருவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. பொதுமக்கள் அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட்போன் இருப்பதால் அதன் வழியே, மோசடிக்காரர்கள் தங்களது மோசடி வேலையை நடத்துகின்றதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் தங்களது வங்கி கணக்குகளை இணைத்துள்ள மொபைல் எண், மூலம் ஸ்மார்ட் போன்களில் வங்கியிடம் இருந்து செய்தி […]

You May Like