கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 13 வயது சிறுமி அருகில் இருக்கும் பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். ஆறு வருடங்களுக்கு முன்பு இந்த சிறுமியின் தந்தை உயிரிழந்து விட்டார்.
எனவே சிறுமியின் தாய் இரண்டாவதாக 35 வயதான விமல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தகைய நிலையில், அச்சிறுமியின் தாய் வேலைக்கு செல்லும் போதெல்லாம் வளர்ப்பு தந்தையாக இருக்கும் விமல் சிறுமியை அடிக்கடி மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளார்.
அத்துடன் இந்த விஷயத்தை வெளியில் கூறினால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். இப்படி அடிக்கடி மிரட்டியே சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். சமீபத்தில், சிறுமியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. எனவே தாய் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்.
அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் சிறுமியிடம் விசாரித்ததில் வளர்ப்பு தந்தை தனக்கு ஏற்படுத்திய கொடுமையை கூறி அழுதுள்ளார். இதனை தொடர்ந்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிறுமியை கர்ப்பமாக்கிய வளர்ப்பு தந்தை விமல் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆசைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.